வாழ்க்கை வாழ்வதற்கே! எப்படி வாழ்வது?

Life is for living
Life is for living
Published on

*விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போக நினைப்பவன் விட்டுக்கொடுக்க மறுக்கிறான்.

*தன்மானத்தை அடகு வைத்து விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது அவசியமல்ல.

*அடுத்தவர் விக்ஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்.

*இறந்தவர் வீட்டில் துக்கம் விசாரிக்கப்போன இடத்தில் தேவையில்லாத ஆலோசனைகள் தவிா்க்கலாம்.

*அடுத்தவர் மத்தியில் நமது குடும்ப உறவுகளைப்பற்றி குறை சொல்ல வேண்டாம்.

*நமக்கு மரியாதை இல்லா இடத்தில் நமக்கேன் வேலை? ஒதுங்கி இருப்பதே நல்லது.

*நமது முதுகிற்கு பின்னால் நம்மை ஏளனம் பேசும் நட்புகளிடம் விலகி இருப்பதே நல்லது.

*உணவு கெட்டால் விஷம், உறவு கெட்டால் துவேக்ஷம்.

*ஆசைப்படலாம் தவறில்லை பேராசைப்படுவதே தவறு.

*சந்தேகம் வாழ்க்கையில் வரலாம். சந்தேகமே வாழ்க்கையாய் அமைந்தால்?

*நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தால் அவதி படுகிறீர்களா?
Life is for living

*தானம் செய்யலாம் தவறில்லை நிதானம் தவறாமல் செய்வதே நல்லது.

*அன்பு எனும் விதையை விதைத்தால், அதுவே அமோக அறுவடையாகும்.

*வாழ்ந்து கெட்டவனைப் பாா்த்து ஏளனம் பேசாதே, அது தவறான செயல்.

*முடிந்தவனிடம் வீரம் காட்டு முடியாதவனிடம் அறமே காட்டு.

*சேமிக்க வேண்டிய நேரத்தில் சேமிக்க மறவாதே!

*வசதி வந்ததும் பழசை மறவாதே!

*ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்காதே!

*கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதே மேலானது.

இதையும் படியுங்கள்:
உழைப்பும் முனைப்பான செயலாற்றலும்!
Life is for living

*அடுத்தவர் உயர்வு கண்டு பொறாமைப்படாதே!

*உழைப்பை மறவாதே, உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவம் மறவாதே!

இந்த நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்வதே நல்லதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே அதை சரிவர இயக்குவது நமது கையில்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com