
சமீபத்தில் ஒரு சூப்பரான பழமொழியை படித்தேன்.
Discipline takes you to the places that motivation can't.
இதை கேட்க சாதாரணமாக இருந்தாலும் இதில் புதைந்திருக்கும் அர்த்தம் நம்மை சிந்திக்க வைக்கும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இப்போது நீங்கள் ஒரு உடற்பயிற்சி செய்யும் நபரை பார்த்து அவரை போலவே உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அந்த உந்துதலின் காரணமாக அதற்கான முயற்சியை அடுத்த நாளே செய்யத் தொடங்குகிறீர்கள். ஆனால், கொஞ்ச நாளிலேயே அந்த உந்துதல் போனதும் அந்த செயலை செய்யாமல் நிறுத்திவிடுவீர்கள்.
ஏனெனில், மோட்டிவேஷன் உங்களை ஒரு செயலை ஆரம்பிக்க தான் உதவுமே தவிர உங்களை ஓட வைக்க உதவாது. என்ன தான் நிறைய மோட்டிவேஷன் வீடியோக்களை பார்த்து பரவசம் ஆனாலும் அது ஆரம்பிக்க மட்டுமே உதவுமே தவிர அந்த செயலை தொடர்ந்து செய்ய வேண்டுமானால் உங்களிடம் Discipline கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மோட்டிவேஷன் என்னும் சாவி உங்கள் வண்டியை ஆன் செய்ய வேண்டுமானால் உதவுமே தவிர, அந்த வண்டியை நீங்கள் எடுத்துக் கொண்டு நினைத்த தூரத்தை சென்று அடைய வேண்டும் என்றால், அதற்கான எரிப்பொருள் உங்கள் வண்டியில் இருக்க வேண்டும். அந்த எரிப்பொருளுக்கு பெயர் தான் Discipline.
கால்பந்து வீரர் ரொனால்டோ மாதிரி ஆக வேண்டும் என்று ஆசை எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால், அவர்கள் கடைப்பிடிக்கும் டயட், டிரைனிங் ஆகியவற்றை Discipline உடன் தினமும் கடைப்பிடிப்பதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. அதனால் தான் நாம் இன்னும் அவரை மறக்காமல் இருக்கிறோம். அதைப்போல நீங்கள் எப்போது Discipline ஆக ஒரு விஷயத்தை ஆரம்பிக்கிறீர்களோ அப்போது தான் நீங்கள் வளர ஆரம்பிப்பீர்கள்.
மறக்க வேண்டாம், எல்லோராலும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியும். யாரிடம் Discipline என்கிற எரிப்பொருள் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே நினைத்த இடத்தை சென்று அடைய முடியும். இப்போது இந்த பழமொழியை மறுப்படி கேட்டுப் பாருங்கள், Discipline take you to the places that motivation can't. மோட்டிவேஷன் உங்களுடைய ஒரு நாளை மாற்றலாம். ஆனால், Discipline உங்களுடைய மொத்த வாழ்க்கையையுமே மாற்றிவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.