
பிண்ணாக்கு கீரை செங்குத்தாக வளரும் ஒரு தாவரமாகும். இது மிகவும் செழித்து கிளையாக சுமார் ஒன்றறை மீட்டர் உயரம் வளரும். 'புண்ணாக்குக் கீரை' என்றும் அழைக்கப்படும் இது, சில நேரங்களில் சணல் இழைகளுக்கான முதன்மை ஆதாரமாகவும் உள்ளது. நார் உற்பத்திக்காக வளர்க்கப்பட்டால், இது நாலு மீட்டர் உயரம் வரை எட்டும். இதன் ஆணிவேர் உறுதியாக தண்டைத் தாங்குகிறது.
இதன் தண்டு மங்கலான சிவப்பு - பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் ஆறு முதல் 10 சென்டிமீட்டர் நீளமும் இரண்டு முதல் நான்கு சென்டிமீட்டர் அகலமும் இலை விளிம்புகள் ரம்பப்பல் வடிவாக இருக்கும்.
இந்த தாவரத்தின் பூக்கள் இலைக்காம்புக்கு அருகில் ஒன்று அல்லது இரண்டு நுனி வளர்ந்து சூழ்ந்து மொட்டுகளாக கொண்டதாக இருக்கும். மலர்கள் சிறிய காம்பில் இருக்கும். இவை ஐந்து புள்ளி வட்டங்கள் ஐந்து இதழ்கள், பத்து மஞ்சள் கருவகக் கூறுகளை கொண்டிருக்கும். இதன் காய் பிரண்டை வடிவில் ஐந்து குறுக்கு வெட்டு பிரிவுகளோடு இரண்டு முதல் 8 சென்டிமீட்டர் நீளம் வரையும் இருக்கும்.
காய்களின் நிறம் சாம்பல் நீலம் முதல் பச்சை அல்லது பழுப்பு கருப்பு வரை மாறுபடும். காயில் உள்ள ஒவ்வொரு விதை அறையிலும் 25 முதல் 40 விதைகள் இருக்கும் ஒரு காயில் 125 முதல் 200 விதைகள் வரை இருக்கும்.
நல்ல வகையான கீரைகள் இருந்தாலும் ஒரு சில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். கிராமங்களில் பல வகை கீரைகள் இருந்தாலும் அதில் ஒன்றுதான் இந்த பிண்ணாக்கு கீரை. இதனை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பலன்கள் ஏராளம்.
1. விஷக்கடி தீர...
நம் வீடு சுற்றுப்புற பகுதிகளில் தேள், பூரான், தேனி, விஷ வண்டுகள் அவற்றினால் கடிபட்ட நபர்கள் இந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனை நீக்கவும், விஷம் பரவாமல் தடுக்கவும், பிண்ணாக்கு கீரை பக்குவம் செய்து சாப்பிட்டால் உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும் .
2. செரிமான சக்தி தீர...
பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமான செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை, உடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
3. கல்லீரல் நோய் குணமாக...
தவறான உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகள் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு அடிக்கடி பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளை போக்கலாம்.
4. மூலம் குணமாக...
மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும் வாழ்ந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும், பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. மூலப் பாதிப்பு உள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி சமையல் செய்து சாப்பிடலாம்.
5. வாயு தொந்தரவு தீர...
வாதத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாய்வு கோளாறுகள் ஏற்படுகிறது. பிண்ணாக்கு கீரை உடலின் வாத தன்மையை சீராக்கி, வாய் கோளாறுகளை சரி செய்து உடனே ஆரோக்கியம் பெற செய்கிறது. எனவே, அடிக்கடி பிண்ணாக்கு கீரைசாப்பிட்டு வந்தால் வாயு கோளாறுகள் நீங்கும்.
6. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூட...
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக் கொண்டே செல்லும்போது குறைந்து கொண்டே வரும். பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால், அதில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும் ஆபத்தான நுண் உயிர்களை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.
7. நீரிழிவு நோய் தீர...
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கணிசமாக குறையும். எனவே, வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை அது பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
8. சிறுநீரக கற்கள் நீக்க..
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை அது சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட பிண்ணாக்கு கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் உதவி பெறுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் இரண்டு முறை புண்ணாக்கு கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)