தேவை எது? ஆடம்பரம் எது? – ஒரு தெளிவான பார்வை!

Let's stay calm
Let's stay calm
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on

வாழ்க்கை ஒரு வட்டம். அதில் ஏற்றம், மேடு, பள்ளம் இருக்கத்தான் செய்யும். அதற்கு தகுந்தாற்போல நாம்தான் திட்டமிடுதலோடு இலக்கு நிா்ணயம் செய்து வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். பொதுவாகவே வருவாய்க்கு தகுந்தாற்போல செலவுகளை திட்டமிட்டுசெய்தல் வேண்டும்.

அந்த வேலையை நாம் சரிவர செய்யாத நிலையில் கடன் வாங்கும் நிலை ஏற்படும். இப்படியே போனால் கடன்மேல் கடன் வந்து கஷ்டமான சூழலை நாமே வளர்த்துக் கொள்வதுபோல ஆகுமே!

செல்வத்திற்கு பிறகு வறுமை வருவதைக்காட்டிலும் வறுமைக்குப் பின் செல்வம் வீடு தேடிவருவதே மேலானது! நமது நடவடிக்கைகளில் மற்றும் திட்டமிடல் போன்ற படகில் எங்கே துவாரம் ஏற்பட்டது என்பதை கணவன் மனைவி இருவரும் சீா்தூக்கிப்பாா்த்து அதை சரிசெய்ய வேண்டும்.

அதுவே மீளவும் நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என தான்தோன்றித்தனமான செயல்பாடுகளில் இறங்கவே கூடாது. நமக்கு கிடைக்கும் அனுபவமே நமக்கான வழிகாட்டி.

அனுபவம் தானாக வருவதில்லை வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் நிலைபாடுகளில் வருவதே அனுபவம். அது கற்றுத்தரும் பாடமும் வலிமையானது.

அது நமக்கு வைக்கும் பரிட்சையில் நாம் தோ்ச்சி பெறுவதே புத்திசாலிக்கு அழகானது. பொதுவாகவே நமது செயல்பாடு மற்றும் நடைமுறைகளால் வருவதுதான் சிறப்பான வாழ்வாகும், என்பதை உணர்ந்து நடந்தாலே அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி பெறமுடியும்.

ஆக நாம் அல்லும் பகலும்பாடு பட்டுசோ்த்த பணத்தை காலத்திற்கும் தக்க வைத்துக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.

பணம் ஒரு கிாியா ஊக்கி அதை சரிவர பயன்படுத்திட கற்றுக்கொள்வதே சிறந்த ஒன்று.

பொதுவாக பேசுவதற்கு முன்பாக யோசிக்கவேண்டும் அதேபோல பணத்தை செலவு செய்வதற்கு முன்னரும் யோசிக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஊக்கமளித்தல் – மனிதநேயத்தின் அடையாளம்!
Let's stay calm

யோசிக்காமல் ஆடம்பரமாக செலவு செய்தால் பின்னர் பணம் நம்மை விட்டு போனபிறகு யாசிக்கத்தான் நோிடும் என்பதை உணர்வதே நல்லது.

அதேபோல காலம் அறிந்து பயிா் செய்வதுபோல எதிா்காலத்தின் தேவை அறிந்து செலவுகளை கட்டுப்படுத்திசெலவு செய்வதே நல்லது. எங்கும் எதிலும் நிதானம் கடைபிடித்து வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்!

logo
Kalki Online
kalkionline.com