மனிதம் காக்கும் மகா குணங்கள்!

Motivational articles
Motivational articles
Published on

பொதுவாகவே எண் ஒவ்வொன்றிற்கும் நோ்மறை, மற்றும் எதிா்மறை, ஆற்றல் உண்டு. அதனில் ஒன்பதாம் எண் நவக்கிரஹங்களைக் குறிக்கும். நவரத்தினம், நவராத்திாி, நவாம்சம், என பல்வேறு குறிப்புகளை சொல்லலாம்.

அதுபோலவே நமது வாழ்க்கையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒன்பது குணங்களை கடைபிடித்து வாழ்வதே நல்ல வாழ்விற்கான அடிப்படையாகும். அவற்றில் குறிப்பிட்டுசொல்லும் வகையில் சில வாக்கியங்களை பாா்க்கலாம்.

நம்பிக்கை:

நம்பினாா் கெடுவதில்லை நான்கு மறை தீா்ப்பு என்பது போல பொதுவாக நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். இருப்பினும் இந்த அவசர யுகத்தில் சிலர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து அதனில் பிரச்னை வந்தால் நம்பிக்கைக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விடுமே! ஆக, பாத்திரம் அறிந்து பிச்சை போடுவதுபோல நாம் பழகும் நபர்களின் தரம் அறிந்து நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற ரீதியில் நம்பிக்கையுடன் செயல்படுவதே சிறப்பாகும்.

பொறுமை:

பொறுமை கடலினும் பொிது எனவே எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கோபதாபங்களைக் களைந்து பொறுமை கடைபிடித்து நிதானம் தவறாமல் வாழ்வதே நல்லது. பொறுத்தாா் பூமி ஆள்வாா் என்று பொியோா்கள் சொன்னதை நினைவில் கொள்வதே சிறப்பானது.

நோ்மை:

நோ்மை என்பது சராசரி மனிதன் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்றாகும். நோ்மைக்கு என்றுமே அழிவில்லை. அதேபோல எவ்வளவுசிரமம் வந்தாலும் எத்தனை இடையூறுகள் துரத்தினாலும் நாம் கடைபிடித்துவரும் நேர்மையை தொடரவேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒரு தப்பு செஞ்சா கதை க்ளோஸ்… 'கேம் தியரி' சொல்லும் ரகசியம்!
Motivational articles

அன்பு:

அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்வதே சாலச்சிறந்தது. எந்த விஷயத்தையும் அன்பால் சாதித்து விடலாம். சிறப்பான வாழ்வு வாழ அன்பே பிரதானமாகும்.

பொது அறிவு:

பொது அறிவு என்பது நமக்கான கவசமாகும். என்னதான் நாம் அதிகம் படித்திருந்தாலும் பொது அறிவுதான் நமக்கு பலவித அனுபவங்களைத்தரும்.

நற்குணம்:

மனிதனின் வாழ்வில் நல்ல குணம் இருந்தால்தான் சிறப்பானது. நமது நல்ல குணத்தால்தான் வெற்றிமீது வெற்றி வந்து நம்மைச்சேரும் என்பதே தாரக மந்திரமாகும்.

அதேபோலவே மரியாதை, நன்னெறி, நல்ல நடத்தை இவைகளையும் நாம் சரிவர கடைபிடிக்கவேண்டும். மரியாதை கொடுத்து மரியாதையை பெறவேண்டும். அது நமது நன்னெறியின் அடையாளமாகும். அதோடு நல்ல ஒழுக்கமும்,நல்ல நடத்தையுமே நமக்கான இரண்டு கண்களாகும்.

மேலே சொன்ன ஒன்பது விஷயங்களை நாம் கடைபிடித்து வாழ்ந்து வந்தோமேயானால் நமக்கு இறைவன் அருளால் நல்லதே நடக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com