
சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோற்றுப் போகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று நெப்போலியன் ஹில் ஆராய்ந்தார். தங்கள் வாழ்வைப் பொறுத்தவரை வெற்றியாளர்கள், தெளிவான நோக்கம் கொண்டிருந்ததை அவர் கண்டார்.
அமெரிக்க உருக்காலை அதிபரான ஆண்ட்ரூ கார்னகியின் எழுத்தும் பேச்சும் அக்கருத்தில் அவருக்கு அசையாத நம்பிக்கையை ஏற்படுத்தியது. அப்படியென்றால்... நோக்கத்தில் தெளிவு இல்லாதவர்கள் தோற்றுப்போகிறார்கள்.
தாங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம். அங்கே செல்வதற்கான நம்பிக்கை கொண்டிருக்கிறோமா என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவ்விஷயத்தில் மற்றவர் களுக்கு வழிகாட்டவே தமது வாழ்வில் பெரும்பகுதியை நெப்போலியன் ஹில் செலவிட்டார்.
குறிக்கோளை அமைத்துக் கொள்வது தொடர்பான அவருடைய சொந்தக்கருத்துக்கள் சக எழுத்தாளர் களுடைய கருத்துக்களையும் இணைத்துக் கொண்டு சீர்பெற்றன. ஆனால். அடிப்படைக் கொள்கையைப் பொறுத்தவரை அது அப்படியே இருந்தது.
நான்கு சிறப்புக்குறிப்புகள் கொண்ட ஒரு சூத்திரத்தை அவர் பரிந்துரைத்தார்.
1. முதலில், வாழ்க்கையிலிருந்து அதிகபட்சமாய் எதைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவு ஊதியம் பெறுவது, கற்பனை செய்து கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பதவியை அடைவது அல்லது விற்பனையை தான் விரும்பும் அளவுக்கு உயர்த்துவதுதான் தொடங்கவிருக்கும் தொழிலுக்கான துணிவையும், முதலீட்டையும் தேடிக்கொள்வது இப்படி எதுவாகவும் அது இருக்கலாம்.
2. இரண்டாவதாய் உங்கள் பிரதான குறிக்கோளைத் தீர்மானிப்பதற்கான திட்ட அளவை நீங்கள் அடைந்ததும் அந்த வெற்றிக்கு நாம் தகுதியானவர் என்ற உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும். இரண்டாவதாய், உங்கள் பிரதான நோக்கத்தை அடைதற்கான திட்டத்துக்கு ஒரு சுருக்கக் குறிப்பு (Outline) தயார் செய்து கொள்ளுங்கள். அது மிக நீண்டதாய் இருக்கக்கூடாது. எத்தனைக்கு சுருக்கமாயிருக்கிறதோ அத்தனைக்கு அதில் முக்கியப் பிரச்னைகளில் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.
3. மூன்றாவதாய், உங்கள் குறிக்கோளை எப்போது அடைவது என்பது பற்றி ஒரு கால அட்டவணை தயார் செய்து கொள்ளுங்கள். பெரிய குறிக்கோளை ஒரே தாவலில் நீங்கள் அடைந்துவிட முடியாது. உங்கள் திட்டத்தில் உச்சியை அடைவதற்குத் தேவையான இடைக்கால நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டும். நீங்கள் ஏறிக்கொண்டிருக்கும் ஏணியில் ஒருபடியை விட்டு இரண்டாம் படிக்கு ஏறலாம். ஆனால். கீழேயுள்ள படியிலிருந்து மேலேயுள்ள படிக்கு ஒரே தாவலில் சென்றுவிட முடியாது.
4.நான்காவதாய், உங்கள் தெளிவான நோக்கத்தையும், ஒரு பிரார்த்தனை திட்டத்தையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு மாதிரி தினமும் பல முறை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள்.
அனைத்தையும்விட செயலில் இறங்குவது முக்கியம். திட்டங்களும், குறிக்கோள்களும் அவசியம். ஆனால் நீங்கள் செயல்படாவிடில் அவை அனைத்துமே வீண்தான். உங்கள் திட்டங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுங்கள்.