
சில பழமொழி, பொன்மொழிகளை படிக்கும்பொழுது மனதில் ஒரு உற்சாகம் மேலிடும். அவற்றை சிந்தனை துளிகள் என்று கூறுவது உண்டு. நாமும் இதுபோல் உழைத்து முன்னேறவேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தும். எதையும் சுருங்கச்சொல்லி எளிதில் விளங்க வைக்கும் அற்புத சக்தி படைத்தது இது. அதுபோன்ற பல சிந்தனையாளர்களின் சிந்தனை துளிகளை இதில் காண்போம்.
பலம் என்பது உடல் அளவை பொருத்தது அல்ல. அளப்பரிய மன உறுதியைப் பொறுத்ததாகும் என்கிறார்.
-மகாத்மா காந்தி
திட்டமிடப்படாத செயல் துடிப்பில்லா படகு என்கிறார்.
-நேரு
முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன.
-லார்ட் மான்ஸ் பீல்ட்
சிந்திக்கும் நேரத்தை அதிகமாக்கினால் அது சக்தியின் ஊற்று .
-அர்னால்டு கிளவுசர்
சிந்தனை செய்வது வளர்ச்சியைத் தரும்.
-ஜார்ஜ் மோர்
உறுதியுடன் இரு காரியம் முடிந்துவிடும்.
-அடிசன்
ஒவ்வொரு பறவைக்கும் ஆண்டவன் அமுது படைக்கிறான். ஆனால் அந்த உணவை அவன் பறவையின் கூட்டில் இடுவதில்லை.
-ஹாலண்ட்
ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேற எதுவும் தேவையில்லை.
-சிசரோ
ஆண்டவன் படைப்பில் மனித மனம் என்பது ஒரு அருமையான அற்புதமான விஷயம். எந்த ஒரு எண்ணத்தையும் உள்வாங்கிக் கொண்டு சரியான நேரத்தில் அதை செயல்படுத்தக்கூடிய அபூர்வ சக்தி அதற்கு உண்டு என்கிறார்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி
உழைக்காத மனிதனுக்கு மகிழ்ச்சி கிடையாது .
-டிஸ்ரெலி
உழைப்பிலிருந்து பிறக்கின்ற இன்பத்தை உணர்ந்துதான் பாரேன் என்கிறார்.
-அறிஞர் லாங் பெல்லோ.
கடமைதான் விதியை நிர்ணயிக்கின்றது என்கிறது.
-கிரீஸ் நாட்டு பழமொழி
அரிவால் உழைப்பவர் ஆளுகின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
-ஆஸ்கார் வைல்ட்
வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டுமல்ல; நம்மையும் பிறரையும் நல்லோர் ஆக்குவதே.
-மாஜினி
புத்தகங்களைப் படிப்பதை காட்டிலும் மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம்.
-ஜீன் காக்டி
பணம், ஆற்றல் ,திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருட்களே அன்றி அவையே வாழ்க்கையாகாது .
-ஜேம்ஸ் ஆலன்
அறிவு எல்லோரிடமும் உண்டு. ஆனால் அதைப்பயன்படுத்த தெரிந்த ஒரு சிலரே அறிவாளிகள் என்று போற்றப்படுகின்றனர். அறிவை பயன்படுத்தத் தெரிவதே அறிவு.
- ஒரு இத்தாலிய அறிஞர்.
பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆத்மார்த்த ஏக்கமாய் இருக்கிறது. -வில்லியம் ஆலிஷா.
பயன் கருதாத செயலுக்கு அற்புத சக்தி உண்டு.
-வினோபாஜி
அறிவு என்பது தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் கம்பீரத்தில்தான் இருக்கிறது.
-கன்பூசியஸ்