தோல்வியே உந்துசக்தி: மாற்று யோசனை மூலம் முன்னேற்றம் காணும் ரகசியம்!

Lifestyle articles
Motivational articles
Published on

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை. மாற்றி யோசனை செய்வது என்பது ஒரு விஷயத்தை அல்லது சிக்கலை வழக்கமான முறைகளில் இருந்து விலகி, புதிய கோணத்தில் அணுகி, வேறுபட்ட தீர்வைக்காண முயற்சிப்பது அல்லது வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டு கண்டறிய முயற்சிப்பதாகும். பழைய தீர்வுகளில் வெற்றி காணாத பொழுது மாற்று வழிகளைத் தேடுவது இயல்புதானே! எந்த ஒரு பெரிய மாற்றமும் ஒரு புதிய அல்லது மாற்று சிந்தனையில் இருந்துதான் தொடங்குகிறது. இதற்கு ஆக்கபூர்வமான கண்ணோட்டம் தேவை. ஒரு பிரச்னையைப் பல கோணங்களில் இருந்து ‌அணுகுவது சிறந்த தீர்வைத் தரும்.

ஒருவருடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசுகளும் பாராட்டுகளும் இருக்கலாம். ஆனால் அவருக்கு பின்னால் இருந்து அவமானம், நிராகரிப்பு, தோல்வி போன்றவையே அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கும். ஒருவர் தனது வேலையில் விருப்பமில்லாமல் சோர்வாக இருந்தால், அதற்கு பதிலாக அதே திறமைகளை வேறு துறையில் பயன்படுத்தி புதிய தொழில் தொடங்குவது ஒரு மாற்று யோசனையாக இருக்கும். மாற்றி யோசனை செய்து ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயல்பட வாழ்வில் மாற்றங்கள் தானாக வரும்.

சிந்திக்கும்போதுதான் மாற்றங்கள் உருவாகின்றன. மனிதர்கள் சிந்தித்த காரணத்தால்தான் பொருளாதாரம், விஞ்ஞானம், பண்பாடு, மொழி எனப் பல துறைகளில் நம்மால் மாற்றத்தை உருவாக்க முடிந்தது. சற்று மாற்றி யோசிக்கும் சிந்தனைகள்தான் மாற்றங்களுக்கான கருவை உருவாக்குகிறது. தற்போதைய சிந்தனை முறையில் இருந்து மாறுபட்டு சிந்திப்பது, புதிய மற்றும் புதுமையான யோசனைகளை உருவாக்குவது, இருக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று தீர்வுகளைக் கண்டறிவது, புதிய கோணங்களில் பிரச்னைகளை அணுகுவது போன்ற மாற்று வழிகளில் சிந்திப்பது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை வாழை மரமாக மாற்றுங்கள்!
Lifestyle articles

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ், டிம் பெர்னர்ஸ்-லீ போன்றவர்கள் புதிய சிந்தனையாளர்களாக இருந்து தொழில்துறையை மாற்றியுள்ளனர். புதிய மற்றும் வித்தியாசமான யோசனைகளை உருவாக்குதன் மூலம் தொழில்நுட்ப மற்றும் வணிக உலகை மேம்படுத்த முடியும். சிலர் தங்களின் திறமைகளை ஆர்வமாக மாற்றுவதன் மூலம் வெற்றி பெறுகிறார்கள். இதுவும் ஒரு வகையான மாற்றி யோசனையாகும். மாற்றங்கள் வருவதற்கு மாற்றி யோசனை செய்வது அவசியம்.

ஒரு பிரச்னையை அல்லது ஒரு விஷயத்தை அதன் வழக்கமான வழிகளில் அணுகுவதற்கு பதிலாக, புதிய வழிகளில் அணுகுவது மற்றும் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்பதை மாற்று வழிகளில் சிந்திப்பது ஆக்கபூர்வமானதாக அமையும்.

நாம் பெரும்பாலும் புதிய யோசனைகளுக்கு எதிராக செயல்படுவோம் அல்லது மாற்றங்களை எதிர்க்க முயற்சிப்போம். ஆனால் முன்னேற்றத்திற்கு அவற்றை ஏற்றுக்கொள்வதே சிறந்தது. வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டுமானால் புதிய கோணங்களில் சிந்திப்பதும், புதிய கருத்துக்களையும் அணுகுமுறைகளையும் ஏற்றுக்கொள்வதுமே மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com