மன மகிழ்ச்சியை கடன் வாங்க முடியாது..!

Motivational articles
Happy mindset
Published on

ணம், உடைகள், நகைகள், வண்டிகள் போன்ற பலவற்றை கடன் அல்லது இரவல் வாங்கிக் கொண்டு உபயோகித்து பலன் பெறலாம்.

ஆனால் மன மகிழ்ச்சியை கடன் அல்லது இரவல் வாங்கி பயன்பெற முடியாது. தனி நபர் அவரின் அனுபவத்தினால் உணரமட்டும் முடியும் மன மகிழ்ச்சியை.

மன மகிழ்ச்சியை உணர்ந்து பூரிப்பு அடைய பலர் ஆசைப் படுகின்றனர். வெகு சிலர் மன மகிழ்ச்சி அடைவதுடன் அதை தங்கள் கட்டுப்பாட்டில் அசால்டாக வைத்துக் கொண்டு மகிழ்கின்றனர்.

அது எப்படி ஒரு சிலருக்கு சாத்தியமாகின்றது என்பதை காண்போம்.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் வலிமை, இயலாமை பற்றி நன்கு அறிந்தும், புரிந்துக் கொண்டும் செயல்படுகின்றனர்.

ஆசை வைப்பதிலும் உணர்ந்து வைத்து அதன் இலக்கை அடைய முயற்சிகள் எடுத்து ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.

இவர்களுக்கு நன்கு தெரியும் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் எப்பொழுதும் வெற்றியோ அல்லது சாதகமான முடிவுகளோ கிட்டாது என்று.

ஏற்ற, தாழ்வு நிறைந்த வாழ்க்கை சக்கரத்தில் வெற்றி, தோல்வி இரண்டிற்கும் இடம் உண்டு என்று நன்கு அறிவார்கள்.

எனவே முடிவு சாதகமாகவோ (வெற்றி) பாதகமாகவோ (தோல்வி) அமையும் பட்சத்தில் இரண்டு நிலைகளையும் எதிர்கொண்டு கடந்து செல்லும் பக்குவத்தை நன்கு வளர்த்துக் கொண்டவர்கள் இத்தகையை மனிதர்கள்.

முடிவு எந்த வகையில் இருந்தாலும் அதிக அளவு சந்தோஷமோ அல்லது அளவுக்கு அதிகமான துக்கத்தையோ வெளிக் காட்டாமல் இயல்பாக இயங்க தயார்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

வெற்றி மற்றும் தோல்வி இவைகள் கற்றுத்தரும் பாடங்களில் இருந்து மேலும் கற்று அனுபவத்தை வலிமை படுத்திக் கொள்ள முடியும் இவர்களால்.

இதையும் படியுங்கள்:
காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாமே..!
Motivational articles

எதுவும் எல்லா நேரங்களிலும் நிலையானது இல்லை என்பதை நன்கு அறிந்த இவர்களால் மாற்றங்களை வரவேற்று அவைகளில் விரைவில் ஐக்கியம் ஆகமுடியும். அதற்கு தேவையான நடவடிகைகளில் கவனம் செலுத்துவார்கள்.

மன மகிழ்ச்சி அடைய இவர்கள் பின்பற்றுவது எளிய வழிதான்.

அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு ஏமாற்றதை எதிர் கொள்வது இவர்கள் அகராதியில் இடம் இல்லை.

இவர்கள் சமநிலையான அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை பின் பற்றுகிறார்கள். (balanced approach and balanced life)

இவர்களுக்கு நன்கு தெரியும் நம்மை சுற்றி நடைப்பெறும் பல செயல்பாடுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று.

எனவே அனாவசியமாக அலட்டிக்கொண்டு டென்ஷனை தேவையில்லாமல் அதிகரித்துக்கொண்டு அவர்களது மன நிம்மதியை இழக்க இவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பதில்லை.

மன நிம்மதி கை வசம் இருக்க, நேர்மறை செயல்பாடுகளில் கவனம் செலுத்தி பலன்களை அனுபவிக்க முடிகின்றது இவர்களால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com