உழைப்பே உயர்வுதரும், உழைக்காமை தோல்வி தரும்!
மனிதனராகப் பிறந்த ஒவ்வொருக்கும் இறைவன் நல்லதைத்தான் செய்கிறான். அதை பயன்படுத்திக் கொள்வதும் பயன்படுத்தாமல் விடுவதும் நமது நோ்மறை மற்றும் எதிா்மறை சிந்தனையைப் பொருத்தே அமைகிறது.
உழைப்பே மனிதனை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்கிறது.
பொதுவாக "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதைப்போல, ஆடிமாதத்தில் விதையை நட்டால்தான் ஐப்பசி மாதம் அறுவடை செய்ய முடியும்.
ஆக ஆடிமாதத்தில் விதையை நடாமல், ஐப்பசியில் கதிா் அரிவாளை தூக்கிக்கொண்டு அறுவடைக்கு போனால் பலன் பூஜ்யம்தான்.
ஆக உழைக்காமல் எதுவும் வராது அதுதான் நிஜம்.
இதைத்தான் --தியோடர் ரூஸ்வெல்ட் என்ற அறிஞர் தனது கருத்தை பின்வருமாறு சொல்லியுள்ளாா்,
"தகுதியான உழைப்பைக் கடுமையாகச் செய்யக்கூடிய வாய்ப்பினை அளிப்பதுதான் வாழ்க்கை நமக்குத்தரும் பொிய பரிசு" என்று அவரது கருத்தில் எத்தனை விஷயங்கள் அடங்கி உள்ளது பாா்த்தீா்களா?
இதிலிருந்து உழைப்பின் மேன்மையை உணர்ந்து உழைக்க வேண்டிய நேரங்களில்நோ்மையாக உழைத்து, பாடுபட்டால் நமக்கான வெற்றி நம்மைவிட்டு போய்விடாது.
சிலர் அதிா்ஷ்டம் என்பாா்கள், அடுத்தவா்களின் உழைப்பைக் கண்டு பொறாமைப்படுவதால் எதுவும் வந்துவிடாது.
அடுத்தவர் பொறாமைக்கோ அவர்களின் எதிா்மறை விமா்சனங்களுக்கோ நாம் ஒரு போதும் செவிமடுத்து கேட்கக்கூடாது.
நமக்கான நோ்பாதையில் நாம் நோ்மறை சிந்தனையோடு பயணிக்கவேண்டும். ஒருவித லட்சியம், ஒருவித குறிக்கோள் இவைகளுடன் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படுங்கள் அப்போது நீங்கள்தான் வெற்றியாளா்.
படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என முடங்கிக்கிடப்பதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்.
கிடைத்த வேலையில் நம் அயராத உழைப்பைக் காட்டுங்களேன் யாா் தடுத்தாா்கள். அதில் நமக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும், நாம் பணிபுாியும் இடங்களில் நமக்கான மாியாதையும், கெளரவமும் தானே தேடிவருமே!
அந்த நேரம் வெற்றி ஒன்றே பிரதானம் என்ற நோக்கத்தில் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே நல்லது.
நமக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாமே, இதைத்தான் -ஜோகிா்தாசில்: என்ற அறிஞர் தனது கருத்தாக "உங்களுக்கு தேவையானதில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் கவனம் செலுத்துவதுதான் உங்களுக்கு கிடைக்கிறது என அருமையாகச் சொல்லியுள்ளாா்.
வாழ்க்கையின் தத்துவத்தையும் உழைப்பின் மேன்மையையும் புாிந்து நடந்துகொண்டால் நமக்கான இலக்கை நாம் அடைய முடியும்.
நாம் உழைக்க மறுப்பதால் வெளியூா் தொழிலாளா்கள் இங்கே அதிகம் காலூன்றும் வாய்ப்பை நாமே அவர்களுக்கு தந்துவிட்டு அவா்களை நாம் ஏன் விரோதியாக பாா்க்கவேண்டும்.
சிலா் இங்கு எனக்கு எனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை, வெளிநாடு சென்றால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற நினைப்பி்ல் இருப்பவர்களும் உண்டு.
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற கவிஞாின் பாடல் வாிகளுக்கு ஏற்ப உழையுங்கள், உழைப்பின் மேன்மை அறிந்து செயல்படுங்கள்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற நிலையை அடையுங்கள்.
உழைப்புதான் உயர்தரும். உழைப்பில்லா நிலை தோல்வியைத்தான் தரும், என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம், அதுவே வேத தத்துவம்.