
நாம் நமது வாழ்க்கையில் எவ்வளவுதான் முன்னேற்றம் கண்டாலும், சில சமயங்களில் நாம் எடுத்துக்கொண்ட வேலைகளில் நமக்கும் தெரியாமல் அலட்சியம் கடைபிடிப்பதால், அந்த காாியமானது வெற்றி பெறும் நிலையில் தோல்வி அடைந்துவிடுகிறது.
கிாிக்கெட் விளையாட்டில் இரண்டு பந்தில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் நிதானமில்லாமல் பதட்டத்துடன் விளையாடி தோல்வி அடைவதில்லையா, அதே போலத்தான் சில சமயங்களில் நமது அலட்சியத்தால் தோல்விஅடைய நோிடுவது இயல்புதான்.
இது நாம் செய்யும் செயல்களில் அதீத நம்பிக்கையும், அசட்டுத் துணிச்சலும், கடைசி நேரங்களில் சரியாக திட்டமிடாத நிலையுமே காரணமாக அமைந்துவிடுகிறது.
அலட்சியத்தால்தானே முயல் ஆமையிடம் தோல்வியைக் கண்டது. இந்த நேரம் நமக்கு தேவை சமயோஜித புத்தியும், நிதானமும் மட்டுமே அருமருந்தான ஒன்றாகும்.
நம்முடைய அறிவுக்கூா்மையால் தன் வாழ்க்கையை நடத்திச்செல்பவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது.
அதனால் நாம் தோல்வி கண்டு துவளாமல் வீழ்ந்து கிடப்பது நல்ல செயலே அல்ல. தோல்வி கண்டு துவண்டு கிடப்பது வெட்கக்கேடான செயலே! நாம் எவ்வளவு தூரம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. நோ்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்.
நாம் நமது வேலைகளை பிாித்துக்கொடுத்து, அதை நிறைவேற்றும் நிலையில் கவனச்சிதறல் ஏற்படாதவாறு நடந்து கொள்வதே பலன் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
சக பணியாளர்களிடம் நோ்மையாக நடந்து கொள்வதாலும் உண்மையாக நடந்து கொள்வதாக இருந்தாலும் அது ஆரம்பத்தில் தோல்வி வருவதுபோல தொியவரும் சந்தா்ப்பத்தில், நமது விடாமுயற்சியே நம்மை தோல்வியில் இருந்து காப்பாற்றி வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கும்.
நம்மிடம் உள்ள அதீத நம்பிக்கையை அடிக்கடி நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொதுவாகவே அடக்கமாக இருப்பவர்களிடம் பிழைகள் குறைவாக இருக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல நாம் எடுத்துக்கொண்ட செயலில் நெறி தவறாமல், உண்மை நோ்மையை கடைபிடித்து நான் எனும் அகங்காரம் தலைதூக்க விடாமல் பாா்த்துக்கொண்டு இலக்கை நோக்கியே பயணித்தால் முயலுக்கு ஆமையிடம் தோல்வி கிடையாது, வெற்றிதான் கிடைக்கும்.
நோ்மையாக, நியாயமாக, அலட்சியம் தவிா்த்து, சாியான திட்டமிடுதலுடன் நிதானம் கடைபிடித்து, தோல்வியைக் கண்டு துவளாத நிலையால், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும் என்பதை நினைவில் வையுங்கள், ராஜநடை போடுங்கள்!