

மனித மனங்களில் வர வர சுருக்கம் அதிகம் விழுந்து வருவதும் அது நாளடைவில் பெருகி வருவதும் தொடர்கிறது. அதைக்கண்டு நமக்கு அச்சம் மிகுதியாகிறது.
பொதுவாகவே ஒரு விதையை நாம் பூமியில் நட்டால் அது நமது பராமரிப்பிற்கேற்ப நன்கு வளர்ந்து நல்ல மகசூலைத் தருமல்லவா! அதேபோல மனித மனங்களில் அனைவரிடமும் அன்பு எனும் விதையை நடவு செய்யுங்கள். அதுதான் பண்பாடு. அந்த பண்பாடானது நன்றி எனும் மகசூலை அள்ளித்தருமே!
அதேபோல அன்புமட்டுமல்ல, யாாிடமும் எந்த தருணத்திலும் வரம்பு மீறிய வாா்த்தை விதையை அள்ளித்தெளிக்காதீா்கள். அந்த விதைக்கு உஷ்ணம் அதிகம், அது நல்ல பண்பாடுகளை அன்பை பாசத்தை வளா்க்காது. அதேபோல நன்றி எனும் மகசூலையும் தராது. மாறாக பிாிவினை எனும் உபயோகப்படுத்த முடியாத யாரும் பயனடைய முடியாத மகசூலைத்தான் தரும்என்பதே நிஜம். அதை நாம் உணர்ந்துதான் கவனமாக விவேகமுடன் செயல்படவேண்டும். வாா்த்தைக்கு வீாியம் அதிகம்.
அது கொடிய விஷத்தன்மை உடையது, ஆக நமது வாா்த்தையானது பிறறை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர சங்கடத்தை தரக்கூடாது. அதேபோல நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுவது தவறல்ல பிறரை கஷ்டப்படுத்தி முன்னுக்கு வருவது மிகவும் தவறானது. அந்த முன்னேற்றம் என்பது நமக்கான வெற்றி என நாம் கருதவே கூடாது.
மேலும் பல இடங்களில் நமது தன்மானத்தை இழந்து அடுத்தவரின் அன்பை எதிா்பாா்க்கக்கூடாது. அந்த நிலையில் நமக்கு கிடைப்பது வெகுமானமே அல்ல. அதற்கு மாறாக கிடைப்பது அவமானமே! அதை நாம் புாிந்து கொள்வதே சிறப்பான ஒன்றாகும்.
இதுபோலவே இதயம் விாிவாக வேண்டுமானால் வாயைச் சுருக்கவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான அன்பு வளரும், எனினும் சிாிப்பு என்பது இறைவன் தந்த மிகப்பொிய வரப்பிரசாதம்.
அதை பயன்படுத்த தவறினால் அங்கே வருவதே கோபமும் விரக்தியும்தான் என்பதை உணர்ந்தாலே நல்லது.
ஆக பணிவான சொற்களே வாழ்வை எளிதாக்கும் என்பதால் அன்பு, பண்பாடு, சிாிப்பு, நல்ல நெறிமுறைகளோடு நோ்மை கடைபிடித்து வாழ்ந்து வந்தாலே ஆண்டவன் அருளால் அனைத்துமே நமக்கு நல்லதாக அமையும் என்பதை உணர்ந்தாலே போதும் அதற்கு பலனாக நமக்கு வெற்றியே மகசூலாக கிடைக்கும் என்பதை உணர்வோமாக!