வாழ்கையில் ஜொலிக்க… சொல்லத் தயங்காதீர்கள்..!

To advance in life
Motivational articles
Published on

சொல்லத்தான் நினைக்கிறேன் என்று பலர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல சந்தர்ப்பங்களை சொல்லாமல் நழுவ விட்டு விட்டு வருந்துகின்றனர்.

உங்களுக்கு யோசனையோ, ஐடியாவோ தோன்றுகின்றது
என்பதே ஒரு சிறந்த அறிகுறி ஆழ்மனதில் தாங்கள் அந்த நிகழ்வு பற்றியோ, வேலை குறித்தோ சிந்தித்துக்கொண்டு உள்ளீர்கள் என்று.

உங்களின் உள்ளே ஏற்படும் அந்த சிந்தனை நேர்மறை எண்ணத்தின் பிரதிபலிப்பு. (Reflection of positive vibe)

நீங்கள் உங்களின் மனத்தளவு பங்கேற்ப்பை அப்படியே விட்டு விடுவது எந்த வகையிலும் உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும் பயன் அளிக்காது.

திறமையுள்ள பலரின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கூச்சம். (Shyness).

நான் கூறும் யோசனைக்கு வரவேற்பு இருக்குமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற தேவையற்ற சிந்தனைகள் கூச்சத்ததின் காரணமாக தாங்கள் கூற வேண்டியவற்றை சரியான தருணத்தில் சொல்லாமல் பிறகு மனதிற்குள்ளேயே புழங்கி கொள்வது ஒரு நன்மையும் செய்யாது.

சிலருக்கு நமது யோசனையை கேட்டு பிறர் எள்ளி நகையாடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை (inferiority complex) பெரும் தடைக்கல்லாக இயங்குவது வழக்கம்.

குறிப்பிட்ட.செயலில் அல்லது பணியில் ஈடுபட்டுள்ள உங்களால் அதை குறித்து சிந்தித்து ஏற்படும் யோசனை கூறினால்தான் அதன் உரிய மதிப்பை அறியமுடியும்.

உங்கள் யோசனை ஆமோதிக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் உங்கள் அனுபவம் கூடும்.

இதையும் படியுங்கள்:
குறைப்படாதீர்கள்! அவரவர் வாழுகின்ற வாழ்க்கையும் சிறப்பானதே!
To advance in life

ஆமோதிக்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் மேலும் செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணம் உருவாகும். (to perform more and have satisfaction on account of motivation)

ஒருவேளை உங்கள் யோசனை நிராகரிக்கப்பட்டால், வாய்ப்பு அதிகரிக்கின்றது. நிராகரிப்பின் காரணங்களை அறியவும், மறுபடியும் யோசித்து சரி செய்யவும்.

இத்தகையை சந்தர்ப்பங்கள் உங்களை மெருக்கேற்றிக் கொள்ள வாய்ப்புக்களை அளிக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

சிலர் சொல்ல தயங்கி, பயந்து சொல்லாமல் விட்டு விட்டு நிகழ்வு முடிந்ததும் நான் அப்பொழுதே நினைத்தேன். என்று சுயபரிதாபம் பட்டுக்கொள்வது (self pity) எந்த வகையயிலும் வேலைக்கு ஆகாது.

வாழ்க்கையில் முன்னேறியவர்கள், முன்னேறுபவர்கள் பிறரின் அனாவசிய விமர்சனங்கள், கருத்துக்கள், ஏளனங்கள் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்கள் யோசனைகள் , எண்ணங்களை சரிவர எடுத்து தயங்காமல் சொல்லி தங்கள் செயல்களில் கண்ணும், கருத்துமாக ஈடுபட்டு வாழ்கையில் ஜொலிக்க முயல்வார்கள்.

பிறரால் முடிந்தால் உங்களாலும் முடியும் என்ற அடிப்படையில் சொல்ல வேண்டியதை சொல்லி முன்னேற முயலவும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com