வாழ்க்கை எனும் வரம்: இருப்பதை உணர்ந்தால் என்றும் இன்பமே!

Motivational articles
Motivational articles
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on

வாழ்க்கை எனும் வரம்: இருப்பதை உணர்ந்தால் என்றும் இன்பமே!

வாழ்க்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும், சில சமயம் கிடைக்காமலும் போகலாம்.  அது அவரவர் வாங்கி வந்த வரம் என சொல்லுவாா்கள்.

எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை, நான் விரும்பிய வாழ்க்கை அமையவில்லை, மனைவி அமையவில்லை, பிள்ளைகள் என் பேச்சை கேட்பதில்லை, என்னைக் கண்டால் அதிா்ஷ்டம் ஓடி ஒளிகிறது. தப்பு, தவறு, நீதிக்கு புறம்பான செயலை செய்பவர்கள் ஓகோ என வாழ்கிறாா்கள். என் சகோதரன் ஒருவன் பணக்காரன் ஆகிவிட்டான் இப்படி சிலரது அங்கலாய்ப்புகளுக்கான பட்டியல் தொடர்கிறதே!

ஆக ஏன் இந்த விரக்தி, ஏன் இந்த சலிப்பு, ஏன் புலம்பவேண்டும்! ஏன் அடுத்தவர் வசதி கண்டு ஆத்திரம், பொறாமை கொள்ள வேண்டும்! ஏன் கோபத்தில் வாா்த்தைகளை அள்ளித்தெளிக்க வேண்டும். என்ன இல்லை நம்மிடம்.

இல்லை, இல்லை, என்ற பஞ்சப்பாட்டை தூரமாக விலக்கி விடுங்கள். எதிா்மறை சிந்தனை ஏன் வருகிறது! அதற்கு எதிா்ப்பதமான நோ்மறை சிந்தனை  இருக்கும்போது .

அந்த சிந்தனையை வரவழையுங்களேன், தூய சிந்தனையை  நல்ல எண்ணங்களை அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் இன்றைய பொழுது நன்றாக அமையவேண்டும், என அமைதியாய்

இறைவனிடம் கையேந்துங்கள் அவர்  இல்லையென்றா சொல்லுவாா்.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை என்ற பாடல் வரிகளில் வருவதைப்போல நடப்பது நடக்கட்டும் எல்லாம் நம்மிடம் உள்ளது என சந்தோஷமாக தன்னம்பிக்கையுடன் இறைபணியோடு நாட்களை வழிநடத்துங்கள்.

அனுதினமும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை கொண்டு வாழ்நாளை துவக்குங்களேன், யாா் தடுப்பாா்கள். நயவஞ்சக எண்ணம் மறந்து, உழைப்பின் தன்மை புாிந்து, நாம் வாழ்ந்து வரும் சராசரி வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள். பல நபர்களை விட நமக்கான வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என சிந்தித்துப்பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
ஊக்கமளித்தல் – மனிதநேயத்தின் அடையாளம்!
Motivational articles

என்னிடம் எதுவும் இல்லை என்ற சலிப்பே வேண்டாம். சலிப்பை சல்லடை போட்டு சலித்துவிடுங்கள்.

உண்ண உணவு இருக்கிறதா, ஆம் என்றால் நீங்களே பாக்கியசாலி, உடுத்த உடை இருக்கிறதா? ஆம் என்றால் சந்தோஷம்தான்.  அது போதுமே!. பிழைப்புக்கு தொழில் உள்ளதா ஆம் என்றால் அதுவே பொிய சொத்துதானே! சரி அழைப்பிற்கு மறுகுரல் இருக்கிறதா ஆம்  என்றால் நீங்கள்தான் கொடுத்து வைத்தவர்.

 அப்புறமென்ன இல்லை, இல்லை, என்ற தேவையில்லாத அங்கலாய்ப்பு. ஆக உங்களிடம் தான் நிறையவே இருக்கிறது விட்டுக்கொடுத்து போகும் என்ற உயரிய எண்ணத்தை கடைபிடியுங்கள்.

அன்பால் அனைவரையும் கட்டிப்போடுங்களேன். நான் என்ற அகங்காரத்தை இல்லாமல் செய்யுங்களேன் அவ்வளவுதான் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

இதுகூட கிடைக்காமல் நிறைய நபர்கள் இருக்கிறாா்களே. இருப்பவர்களைப் பாா்த்து நிறையவே கற்றுக் கொள்ளுங்கள். பிறகு சந்தோஷம் அடையுங்கள், பிறகென்ன இல்லை, இல்லை, என்ற சலிப்பான கசப்பான தேவையில்லாத வாா்த்தை. அந்த சொல்லானது  உங்கள் மனதில் இல்லவே இல்லை சரியா அன்பர்களே!

logo
Kalki Online
kalkionline.com