இங்கே தீர்க்க முடியாத பிரச்னைன்னு எதுவுமேயில்லை..!

Motivation Image
Motivation Imagepixabay.com

ன்னிடம் ஒரு அழகான ஜிமிக்கி கம்மல் இருந்தது. எத்தனை கம்மல் இருந்தாலும் அந்த கம்மலை மட்டும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பேன். ஏதாவது முக்கியமான இடத்திற்கு போகவேண்டும் என்றால் மட்டுமே போட்டு செல்வேன். அப்படி பொத்தி பொத்தி வைத்திருந்த கம்மல் ஒரு நாள் கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது.

உடைந்தது கம்மல் மட்டுமில்லை என் மனசும்தான். “என்ன இது ஆசையா வைச்சிருந்தது இப்படி ஆகிவிட்டதே! எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது. என் வாழ்க்கையில ஒரு விஷயமாவது நல்லா நடக்குதா பாரு?” போன்ற கேள்விகள் தலைக்குள் ஓட ஆரம்பித்து விட்டது.

கம்மல் உடைஞ்சதுக்கும் நான் யோசிக்கிறதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கான்னு கேக்கலாம். ஆனால் நம்ம மனசு அப்படிதானே சிந்திக்கும். சின்ன விஷயத்திற்கு கூட தேவையில்லாத முடிச்சுக்களை போடுமல்லவா? அப்படி தான் என் மனதிலும் ஏகப்பட்ட நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றியது.

பிறகு சிறிது நேரம் கழித்து என்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பார்த்தேன். கம்மலின் அடிபாகத்தை மட்டும் கழட்டி விட்டு மேல் பாகத்தை பயன்படுத்தலாம் என்று தோன்றியது. இரண்டு தோடுகளிலுமே அடிபாகத்தை கழட்டி விட்டு மேல் பாகத்தை போட்டுக்கொண்டேன். இப்போது பிராப்ளம் சால்வ்டு.

இங்கே ஒன்னும் இல்லாத ஒரு சின்ன விஷத்தை ஊதி பெரிதாக்கியதும் நம் மனசு தான். அதே பிரச்சனைக்கு தீர்வு கண்டு பிடிச்சதும் நம்ம மனசு தான்.

ஒரு சின்ன கல்லை நம் கண் பக்கத்தில் வைத்து பார்ப்பதற்கும் அதையே தூரத்தில் வைத்து பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

சின்ன கல்லாக இருந்தாலுமே கண் பக்கத்துல வைச்சி பாக்கும் போது அந்த கல்லை மட்டுமே பார்க்க முடியும். இதுவே தூரத்தில் வைத்து பார்க்கும் போது கல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சின்னதாகவே தெரியும். நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளும் அப்படித்தான்.

இதையும் படியுங்கள்:
இந்த 4 DIY Face Masks உங்க சருமத்தில் ஏற்படும் Tan-களை நீக்க உதவும்!
Motivation Image

நம் வாழ்க்கையில் ஏற்படும் முக்கால்வாசி பிரச்சனை களுக்கு நம்மிடமே தீர்வும் இருக்கும். சற்று பொறுமையாக யோசித்து பார்த்தால் பதில் கிடைத்து விடும்.

இனி வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்று வரும் போது உடனே ரியாக்ட் பண்ணாதீங்க. ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். சற்று நேரம் பொறுமைகாக்கவும். ஏனெனில் இங்கே தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com