நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

தொட்டதெல்லாம் துலங்க வேண்டும். எங்கும் எதிலும் வெற்றி. இதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கிறது. சிலர் எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும் என்பார்கள். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்ற அடையாளம் தந்து விட்டு தோல்வி அடைபவர்கள் தங்களைத் தாங்களே துரதிர்ஷ்ட சாலிகள் என்று முத்திரையைக் குத்திக்கொள்கின்றனர்.

நீங்கள் நேர்மறையான சிந்தனையாளர் ஆக இருந்தால் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உண்மையில் கிடைத்திருப்பது நாம் தேடியது இல்லை என்று பார்க்கும்போது அதில் அதிர்ஷ்டம் இல்லை என்று தோன்றுகிறது. அதையே என்ன கிடைத்திருக்கிறது என்று பார்க்கும்போது அங்கே அதிர்ஷ்டம் ஒளிந்திருப்பது தெரிகிறது. லக்கியானவர்களாகச் சொல்லப் படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை அடிக்கடி அசை போடுகிறார்கள். துரதிர்ஷ்டசாலிகள் தங்கள் வாழ்க்கையில்  நடந்த தோல்விகளை அசை போடுகிறார்கள். மனதில் என்ன மாதிரியான காட்சிகள் ஓடுகிறதோ  அதையே அவர்கள் விரும்புவதாக தீர்மானித்து அத்தகைய சூழலை நோக்கியே அவர்களை நகர்த்துகிறது. அதனால்தான் அதிர்ஷ்டசாலிகள் ஆக நினைப்பவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தின் பக்கமே நகர்கிறார்கள்.

சந்தர்ப்பங்கள் மாறுவேடத்தில் வரும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தாங்கள் தேடியது கிடைக்கவில்லை என்றாலும் வேறு சந்தர்ப்பம் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என நேர்மறையான சிந்தனையோடு பதட்டமில்லாமல் உற்று நோக்குகிறார்கள்.

புதையல் இருப்பதாக தீர்மானித்து அங்கு ஒருவன் ஒரு இடத்தைத் தோண்டுகிறான். அவன் எதிர்பார்த்த தங்கம் இல்லை. அதே சமயம் அங்கே கரி போன்ற பொருள் நிறைய இருக்கிறது. தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்ததால், "சே தங்கத்தைக் தேடினால் கரிதான் கிடைக்கிறது. இதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்," என்று  சென்று விடுகிறான். இதுவே நேர்மறையாக சிந்தித்து, அட, இது வைரப் பாறைகள் போலிருக்கிறதே  என்று அதைத் தோண்டினால் வைரத்தை  அடைவான். இப்போது புரிகிறதா.? தேடியதை விட உயர்வானது கிடைத்தும் அதை அடையவிடாமல் ஒருவரைத் தடுப்பது அதிர்ஷ்டம் அல்ல. எதிர்மறை சிந்தனைதான்.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
Motivation Image

நீங்கள் எதை தேடிப்போகிறீர்களோ அது கிடைக்காதபோது விரக்தி அடையாமல் இங்கு வேறு என்ன இருக்கிறது என்று பரந்த பார்வையோடு பாருங்கள். அங்கே மறைந்திருக்கும் புது வாய்ப்பு தெரியும். நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் ஆக உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com