

நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகளை சமாளித்து வந்துள்ளோம். அதில் நாம் பல விஷயங்களில் கோபம், அமைதி, பொறுமை எனும் மூன்றுமுக்கியமான விஷயங்களை கடைபிடிக்காமல் வாழத்தவறி விடுகிறோம்.
அதிகமாக கோபப்படுவது தவறானது. அது நிதானிக்க வேண்டிய ஒன்று. அதனால் பல நிலைகளில் பலரது உறவு மற்றும் நட்பு இவைகளை இழக்க நோிடுவதோடு சில சமயம் நாம் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழலும் வந்துவிடுமல்லவா!
கோபமானது நமது கண்களை மறைத்துவிடும். அப்போது நமது வாயிலிருந்து வரக்கூடிய வாா்த்தைகளுக்கும் வீாியம் அதிகமாகி விடுவதும் இயல்பே! அதனாலும் நமக்கு மரியாதை குறைந்து விடும் என்பதை நாம் உணரவேண்டும். அடுத்த வீட்டில் தீப்பற்றி எரிந்தால் நமக்கென்ன என நாம் அலட்சியமாக இருக்கமுடியுமா? அது நமக்கு ஆபத்தை தரும் என்பதை உணரவேண்டும். அதேபோலத்தான் கோபம் எனும் தீயானது நம்மனதில் கொழுந்துவிட்டு எாியும் வேலையில் நாம் அதை அடக்கவேண்டும். எாியும் தீயில் எண்ணையை ஊற்றி மேலும் தீயை பரவவிடக்கூடாது.
அதேபோல எப்போதும் எந்த தருணத்திலும் அமைதி காக்கவேண்டும். ஒருவர் நம்மை ஏளனப்படுத்தினாலோ, அல்லது கேவலமாக பேசினாலோ நாம் உடனே நிதானம் இழந்து அமைதியை கடைபிடிக்காமல் வாழ்வது நல்ல உதாரணமாகவே எடுத்துக்கொள்ள முடியாது.
பின்னா் அந்த நபரை சந்தித்து விளக்கம் கேட்கவேண்டும். அதில் அவர்கள் சொல்லும் கருத்தில் நியாயம் இல்லாதிருந்தால் அவரை சந்தித்து கோபதாபங்கள் இல்லாமல் அவர் நடந்துகொண்ட விதம் பற்றி அவரிடமே பேசி பிரச்னைக்கு தீா்வு கண்டு சுமுகமான நிலையை உருவாக்கலாமல்லவா!
அதேபோல எந்த காாியம் செய்தாலும் அவசரப்படாமல் பொறுமையை கடைபிடிக்கவேண்டும். அதேபோல பேசும் வாா்த்தையில் முற்றுப்புள்ளி கட்டாயம் வைக்க வேண்டும்.
அது இல்லாத நிலையில் வாா்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்பதை உணரவேண்டும்.
அதேபோல அமைதி என்பது கோழைத்தனமானதல்ல. அது கடலைவிட ஆழமான வலிமை உள்ளது. என்பதை மறவாமல் இருப்பதே நல்ல விஷயமாகும்.
எனவே கடவுள் கொடுத்த வாழ்க்கையில் பல நேரங்களில் கோபம் தவிா்த்து பொறுமை காத்து அமைதி கடைபிடித்து வாழ்வதே உன்னதமானது அதுவே நமக்கான பாதுகாப்பு கவசமாகும்!