
பெருமை என்பது ஒரு சாதனை அல்லது தன் திறமையின் மீது திருப்தி கொள்ளுதல்; இது தற்பெருமை அல்ல. தற்பெருமை என்பது மற்றவர்கள் முன்னால் தன் சாதனைகளை பெரிதாக்கி பேசுதல் அதாவது தன்னை உயர்த்தி பேசுதல். பெருமை என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் தற்பெருமை என்பது தேவையற்றது.
ஒருவரின் சாதனைகளில் திருப்தி கொள்ளுதல், சுயமரியாதை, தனிப்பட்ட மதிப்பை உணர்த்தல் ஆகியவை நல்ல விஷயம்தான். இது தன்னம்பிக்கை, மற்றும் தன்னைப் பற்றிய நல்ல உணர்வு, மற்றவர்களையும் மதிக்கும் மனநிலையைக் கொண்டிருக்கும்.
தற்பெருமை என்பது எப்பொழுதும் தன்னை மட்டுமே முன்னிறுத்தியும், மற்றவர்களிடம் தன் சாதனைகளை பெரிதாக்கிப் பேசுவதும், தன்னைப் பற்றி மட்டுமே உயர்த்தி பேசுவதும், மற்றவர்களை மட்டம் தட்டுவதுமாகவே இருக்கும். தற்பெருமை பேசுவது நம் மதிப்பை குறைக்கும். இது ஒரு மோசமான பண்பாகும். தற்புகழ்ச்சி உள்ள ஒருவரிடம் பணிவு இருக்காது. அது கர்வத்தை உண்டு பண்ணும்.
பெருமை பேசுவது என்பது நல்லது. ஆனால் அது மற்றவர்களிடம் தவறான புரிதல்களை உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரின் சாதனைகள் மற்றும் திறமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு நல்ல விஷயம்தான்.
ஆனால் அதை மற்றவர்களை இழிவு படுத்துவதற்காகவோ, தற்பெருமை கொள்வதற்காகவோ பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். பெருமை பேசுவது ஒருவருடைய சுயமரியாதையையும், தமக்கான மதிப்பிடும் திறனையும் காட்டுவதாகும். ஆனால் பெருமை பேசுவது ஒருவரால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கவேண்டும். அதே சமயம் அது மற்றவர்களை இழிவு படுத்துவதாகவும் இருக்கக்கூடாது.
தற்பெருமைக்கும் பெருமைக்கும் வித்தியாசம் உண்டு. தற்பெருமை என்பது தன்னை மட்டுமே பெரிதாகக் கருதுவதாகும். இது மற்றவர்களுடன் நல்ல உறவை வளர்க்க உதவாது. ஆனால் ஒருவரின் திறமைகளைப் பற்றி பெருமை பேசுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெருமைப்படும் ஒன்றை சாதித்துவிட்டால் அதை பிறரிடம் சொல்வதில் எந்த தவறும் இல்லை. ஆனாலும் அதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் கேட்பதற்கு எரிச்சல் உண்டாகும்.
இந்த வீண் தற்பெருமை அவசியம் இல்லை. சாதித்தைப் பற்றி பெருமைப்படலாம். அதைப் பிறரிடம் தெரியப்படுத்தவும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து அதனை நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை.
ஒரு விஷயத்தில் அற்புதமாக இருந்தால் நம் நண்பர்களும் குடும்பத்தினரும் நாம் சொல்லாமலேயே அதனை அறிந்து கொள்வார்கள். அதைப்பற்றி நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்காக அவர்கள் நம்மை அதிகமாக மதிப்பார்கள். எனவே இங்கு தற்பெருமை அவசியமில்லை.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!