

ஒரு விவசாயி, அவரது வயலில் மிதமிஞ்சிய மக்காச் சோளம் விளைந்தது. மக்காச் சோளத்தை மக்கள் விரும்பிச் சுவைக்கும் பொருளாக்க விரும்பினார். இப்படி இவர் திட்டமிட்டபொழுது விவசாயிக்கு வயது 58.
மிகக்கடினமாக உழைத்து மக்காச் சோளத்தை 'பாப்கார்ன்' ஆகப் பொரிக்கின்ற ஒரு கருவியை கண்டுபிடித்தார்.
இக்கருவியைக் கண்டு பிடித்ததில் அவரது சேமிப்பும் அத்தனையும் காலியாயிற்று.
ஆனால் இக்கருவியை யாரும் வாங்கவில்லை. காரணம், கருவி கண்டுபிடிக்கப்பட்டபொழுது மக்களிடம் பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் அவ்வளவாக எடுபடவில்லை.
கருவியின் விலையையும். அதனால் உருவாகும் பாப்கார்ன், அதன் மூலமான வியாபாரம் ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் கருவியின் விலை அதிகமாக இருந்தது. ஆகவே கருவியை வாங்க எவரும் முன்வரவில்லை.
எவரிடம் இதைச் சொன்னாலும் ''முடிஞ்சா நீயே பாப்கார்ன் பொரித்து விற்றுப்பார். ஆனால் உன்னால் முடியாது. உனக்கு வயசும் ஆயிடுச்சு. உன் கைக் காசை எல்லாம் தொலைச்சிட்டு நிற்கிறாயே" என்ற ஏளனச் சொற்களே வந்து இவரை வரவேற்றன.
'உன்னால் முடியாது' என்ற சொல்லையே சவாலாக ஏற்று "சிவப்பு வில்" என்று பெயர் வைத்து அரசு அனுமதியும் பெற்றார். இவரே விற்பனைத் தொழிலாளியாகவும் உழைக்கத் தொடங்கினார்.
சிவப்பு வில் திட்டம் தோற்றுப் போனால் இவருடைய வாழ்வே முடிந்துவிடும் என்றாலும் ஆபத்து - நஷ்டம் இவரை ஊக்கப்படுத்தியது.
சில மாதங்களில் 'சிவப்பு வில் சூடு பிடித்தது. ஓரிரு ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க நாடு முழுவதும் மக்கள் விரும்பிச் சுவைக்கும் பொருளாயிற்று பாப்கார்ன்.
58 வயதிலும் திட்டமிட்டு, ஆபத்தை சவாலுக்கு அழைத்து, உழைத்து, வெற்றிக்கொடி நாட்டிய இந்த விவசாயியின் பெயர் ரெடின் பெச்சர் என்பதாகும்.
கோடி கோடியாய்ச் சம்பாதித்துவிட்ட இக்கிழ இளைஞர் நஷ்டத்தைக் கண்டு பயப்படவில்லை.
வேலை தேடி வேலையை கண்டுகொள்ள நீங்கள் செலவு செய்ய இருக்கும் பணம், காப்புக் கட்டணம், கைக்கூலி இவற்றையெல்லாம் சேர்த்து உங்களுக்கு தெரிந்த தொழிலில் முடக்கினால் முன்னேறலாம்.
நஷ்டத்தை கண்டு நடுங்காமல் தோல்வி வந்துவிடுமோ என அஞ்சாமல் பயணவழி எத்தனை கரடுமுரடாக இருந்தாலும் அடிமேல் அடிவைத்து துணிந்து நடப்பவனுக்கு துக்கமும் இல்லை. தோல்வியும் இல்லை.