
அதிகளவு புத்திக் கூர்மையுள்ள மாணவர்கள், மற்றவர்களைப் போலில்லாமல், காலை நேரத்தில் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் வித்யாசமானவைகளாக இருக்கும். அவர்கள் மிகத் தெளிவான மனநிலையுடன், அவர்களின் வளர்ச்சிக்காக, குறிக்கோள் ஒன்றை நிர்ணயம் செய்துகொண்டு அதை அடைவதற்குத் தேவையான நல்ல பழக்கங்களை தினசரி பின்பற்றி வருவார்கள்.
அம்மாதிரியான 5 பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.Lighting hacks: நடைப்பயிற்சி சென்று வந்த பின், ஃபுல் ஸ்பெக்ட்ரம் டே லைட் அல்லது ரெட் லைட் தெரபி உபயோகிப்பது அவர்கள் வழக்கம்.
2.தனி வாய் மொழி சிந்தனை (Solo verbal thinking): சிக்கலான விஷயங்களில், குழம்பிய நிலையில் தெளிவாக சிந்திக்கவும், முடிவெடுக்கவும் முடியாதபோது தனியாக அமர்ந்து உரத்த குரலில் தனக்குத்தானே பலமுறை பேசி, விஷயத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவர்கள் வழக்கம். இதனால் அவர்களின் தகவல் பரிமாற்ற (communication) திறனும் அதிகரிக்கும்.
3.அந்நிய மொழியறிவு: தினமும் சிறிது நேரத்தை தாய் மொழியல்லாத வேற்று மொழியியை மனதிற்குள் பேசிப்பார்ப்பது அல்லது டைரியில் எழுதிப் பழகுவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருப்பர். இதனால் அவர்களின் மூளை, புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்கி தன்னைத்தானே மறுசீரமைத்துக்கொள்ளும் (நியூரோபிளாஸ்டிசிட்டி) திறன் அதிகரிக்கும். மேலும் இது ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் நோக்கும் திறனை அதிகரிக்கவும் உதவும்.
4.வேண்டுமென்றே சலிப்பு (Deliberate Boredom): சில நேரங்களில் அவர்கள் 10-15 நிமிடங்களை எதுவுமே செய்யாமல் கழிப்பதுண்டு. அதாவது எந்த வேலையும் செய்யாமல், போனைக் கூடத் தொடாமல் உட்கார்ந்திருப்பது. இது அவர்களின் மூளைக்கு சலிப்பைத் தாங்கிக்கொள்ள பயிற்சியாகவும், கூர் நோக்குத் திறனையும் படைப்பாற்லையும் அதிகரிக்க உதவி புரிவதாகவும் அமையும்.
5.முந்தைய வெற்றிகளை நினைவுபடுத்தி மகிழ்வது (Savoring Past Successes): முந்தைய காலங்களில் கிடைத்த குறிப்பிட்டதொரு வெற்றி அல்லது புத்திசாலித்தனமும் மகிழ்ச்சியும் நிறைந்த பழைய நிகழ்வுகளை மனதிற்குள் மீண்டும் கொண்டு வந்து மகிழ்வது மூளைக்கு உந்துதல் அளிக்கும். அதன் மூலம் மூளை மேலும் நம்பிக்கையோடு சிறப்பாக செயலாற்ற முடிவெடுக்கும்.
மேலே கூறிய பழக்கங்களை கூடுமானவரை மற்ற மாணவர்களும் பின் பற்றினால் வெற்றி நிச்சயம்.