

நாம் அனைவரும் நமது உடல் நலனை பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறையும் பொறுப்புணர்வும் காட்டவேண்டும். நம் மனித உடல் அமைப்பானது உடல் நலனை இயல்பாக வளர்க்கும் தன்மையில் தான் அமைந்துள்ளது. அதற்கு செயற்கையாக கேடு செய்வது நம்முடைய தவறான பழக்க வழக்கங்களாலும், வாழும் அலட்சியத்தினாலும்தான்.
நாம் தினசரி உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை விடாப்பிடியாக மேற்கொண்டு வந்தோமானால் நோய் நொடி அண்டாது, மருத்துவமனைக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காது, காலம், பொருள் போன்றவற்றை செலவழிக்க வேண்டியது இருக்காது.
உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்குதான் செல்லவேண்டும் என்று இல்லை. அவரவர் வயது, வேலையின் தன்மை, சூழலுக்கு ஏற்ப எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடக்கலாம். வாரத்தில் ஏழு நாட்களும் செல்ல முடியவில்லை என்றால் ஐந்து ஆறு நாட்கள் செல்லலாம். காலையில் நடக்க முடியவில்லையா மாலையில் நடக்கலாம். மதிய நேரத்தில் நடப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செலவழிக்கும் இந்த கால அளவு வாழ்க்கையினை நீட்ட உதவிடும் அருமையான வழிமுறை. சோம்பலுக்கு இடம் தராமல் இந்த உடற்பயிற்சியை செய்து பழகிவிட்டோமானால் பிறகு நாம் செய்யாமல் இருந்தால் ஏதோ ஒரு தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வு தோன்றும். அப்பொழுது அடிக்கும் மழையானாலும், கொளுத்தும் வெயில் ஆனாலும், நடுங்கும் குளிரானாலும் அவற்றிற்கான உபகரணங்களை அணிந்துகொண்டு நடக்க ஆரம்பித்து விடுவோம்.
அதுபோல் சிறிது நேரம் அமைதியாக சலனமற்று இருப்பதற்கு பழகிக்கொண்டால் அது மன இறுக்கத்தைப் போக்கி புத்துணர்ச்சியை பெற வழி வகுக்கும்.
நத்தை, ஆமை ஆகியவற்றுடன் நம் நடைப்பழக்கத்தை ஒப்பிட்டால் நாம் விரைவாக செல்லக் கூடியவர்களே. ஆயினும் நம்முடைய இயக்கத்தை நம்மைச் சுற்றியுள்ள வேறு பல இயக்கங்களுடன் ஒப்பிட்டால் வேகத்தில் நம்மை மிஞ்சும் இயக்கங்கள் பலவும் இருப்பதை காணமுடியும்.
சமவெளியில் சீறிப்பாயும் பெரும்பாலான நதிகளின் வேகத்தை நாம் சுலபமாக மிஞ்சலாம். சாதாரணமாக வீசும் காற்றின் வேகத்திற்கு அதிகம் குறையாத வேகத்தில் நாம் போகமுடியும். ஆனால் வினாடிக்கு ஐந்து மீட்டர் தூரத்தினை எட்டி பிடிக்கவேண்டும் என்றால் பனிச்சிருக்கு மிதியடிகளை அணிந்து கொண்டால்தான் நம்மால் அது சாத்தியமாகும்.
வேகமாக செல்லும் குதிரை மீது சென்றாலும் முயலையோ, வேட்டை நாயையோ எட்டிப் பிடிக்க முடியாது. விமானத்தில் சென்றால்தான் கழுகுடன் நம்மால் போட்டியிட முடியும். நீரை விட நிலத்தில் மனிதனால் அதிக வேகத்துடன் செல்லமுடியும்.
இப்படி நடைப்பயிற்சி என்ற உடற்பயிற்சிக்கு முன்னுரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அப்பொழுதெல்லாம் கலங்கரை விளக்கு எண்ணெயால்தான் எரிந்து கொண்டு இருந்தது.
அதற்கு ஊற்றுவதற்கு அந்த காவலாளி எண்ணெய் வைத்திருந்ததை பலரும் அவசர தேவைக்கு கேட்க எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார். இதனால் கலங்கரை விளக்கு எரிய முடியாமல் போகவே பல கப்பல்கள் மணல் தட்டி பல உயிர்கள் பலியாகின. காரணம் காப்பாளன் கடமை தவறியதுதான். ஆதலால் தன் முன்னுரிமை எதுவோ அதன் மீது கவனம் செலுத்த மறந்தால் இதுபோல்தான் ஆகும். ஆதலால் அதன் மீது கவனம் செலுத்த நாம் அனைவரும் மறக்கவும், தயங்கவும் கூடாது.
அதுபோல் தனிமைக்கு சில மணித்துளிகள் செலவழித்தால் அது வாழ்வின் உயரிய குறிக்கோளை அடைய நம்மை இட்டு செல்வது உறுதி!