
நேரம் தவறாமல் இருக்கக்கூடாது.
வகுப்புகளுக்கு உரிய நேரத்தில் செல்லவும். பாடங்களை உரிய நேரத்தில் முடிக்கவும்.
நேர்மையாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் சகமாணவர்கள் மற்றும் பிற பணியாளர்களிடம், உண்மையாகவும், நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மாணவர்களையும் ஆசிரியர்களை மற்றவர்களையும் மரியாதை உடன் நடத்தவேண்டும்.
சுத்தமாக இருக்கவேண்டும்.
வகுப்பறை பள்ளிகளாகவும் மற்றும் பிற பொது இடங்களில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கவனத்துடன் படிக்கவேண்டும்.
பாடங்கைளை கவனத்துடன் இருந்து ஆசிரியர்களின் அறிவுரைகளை கவனமாக கேட்கவேண்டும்
புத்தகங்கள் உபகரணங்கள் சீருடை போன்றவற்றை கவனத்துடன் கையாண்டு பராமரிக்க வேண்டும்.
பிறர் உடைமைகளை மதிக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்லக்கூடாது. மாணவர்கள் தங்கள் கொடுக்கப்பட்ட நேரத்தையும் ஆய்வுகளையும் கண்ணியமாக செய்து முடிக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி தேடிவரும்.
கடிகாரம் ஓடினாலும், ஓடவிட்டாலும் நாட்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம் . 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே, என்ற ஒரு பழமொழி உண்டு.
மாணவர்கள் திறன் நிறைந்த மாணவர்களாக வளர மிகுந்த ஆற்றலும், அறிவும், ஞானமும் தொடர்ச்சியாக செய்முறையும், படித்தலும், எழுதலும், பேசுதலும் கேட்டலும், அனைத்து மொழிகளிலும் கொண்டிருக்க வேண்டும். மேலும் சத்தான உணவு முறையும் நேர்மையான சிந்தனையும், சமுதாயத்தின் மிகச்சிறந்த பணிகளை வளர்த்துக்கொள்ள உதவும்.
உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் அறிவுபூர்வமாக சிறப்பாக விடை கண்டு உங்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களை தொடர்ச்சியாக கண்காணித்து, கண்டறிந்து தனி திறமை கொண்ட ஆசிரியர்கள் உதவியோடு அறிவை வளர்க்கவேண்டும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற திருவள்ளுவரின் திருக்குறளில் ஒழுக்கம் உடையவர்களுக்கு, ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மை தருவதாக இருப்பதால் உயிரைவிட சிறந்ததாக போற்றப்படும் என வள்ளுவர் சொல்கிறார். முதல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது பள்ளிக்கூடம். இந்த சிறப்பான மேன்மையான பண்பான ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம்! தன்னம்பிக்கையை தனக்குள் ஏற்படுத்தி, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரையும் வாங்கித்தர வேண்டும்.
இதுவே மாணவர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும்
நல்ல ஒழுக்க நெறிகளாகும். இனி அடுத்த வகுப்போ, கல்லூரியோ உங்களது நல்ல நெறிகளால் வெற்றி கிடைப்பது நிச்சயம்!