உறவுகளின் எல்லைக்கோடு: பழகும் கலையில் விவேகம்!

Motivational articles
Motivational articles
Published on

பொதுவாக நாம் அனைவரிடமும் சகஜமாக பழகிவருகிறோம். அப்படி பல நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பேசி பழக்க வழக்கம் தொடரும் நிலையில் சில சமயங்களில் பல வருடம் நம்மோடு பழகியவர்தானே என நினைத்து பலர் மத்தியில் அவருடன் கிண்டலாகவோ அல்லது நையாண்டியாகவோ பேசி விடுகிறோம். அதை சீாியசாக எடுத்துக்கொள்பவர்களும் உண்டு, நகைச்சுவை உணர்வாக புாிந்து கொள்பவர்களும் உண்டு.

நாம் பேசுவதில் வெள்ளந்தியாக பேசினால் கூட சிலர் அதை எடுத்துக்கொள்ளும் விதம் சில சமயங்களில் சங்கடத்தை ஏற்படுத்திவிடுவதும் இயல்பே! ஆக பொதுவாகவே நாம் சில சமயங்களில் சில சந்தர்ப்பங்களில் சூழலுக்கு ஏற்ப நமது பேச்சுமற்றும் பழக்கவழக்கங்களில் அதிக உாிமை எடுத்துக் கொள்வதை தவிா்ப்பது இருதரப்பினர்களுக்கும் நல்லதாகும்.

சிலருக்கு இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அதேபோல யதாா்த்தமாக எடுத்துக்கொள்பவர்களும் உண்டு. ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது. அப்படி வித்யாசமாக இருந்தாலும் அவை வெவ்வேறு வகையில் பயன் தருகிறது.

கட்டை விரல், ஆட்காட்டிவிரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டுவிரல் என பெயர்களுக்கு ஏற்ப பயன்படுகின்றன. ஆனால் மனித மனங்களோ வேறுபாடாக இருக்கின்றன.

எதையுமே நாம் எடுத்துக்கொள்ளும் விதத்திலேயே அதற்கான பலன்கள் நமக்கு எதிா்மறையாகவும், நோ்மறையாகவும் சில அனுபவங்களை கற்றுக் கொடுக்கின்றன. அந்த அனுபவம் தந்த பாடங்களில் நாம் நல்லது கெட்டதை சீா்தூக்கி பார்க்கவேண்டும்.

அதற்கு தகுந்தாற்போல யாாிடம் எப்படி பழகவேண்டும் என்பதை தொிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப பழகுவதே காலத்திற்கும் நல்லதாகும்.

இதையும் படியுங்கள்:
வெல்லும் ஆற்றல் கொள்ளுங்கள் - வாழ்க்கையில் வென்று காட்டுங்கள்!
Motivational articles

இயல்பாகவே சிலர் நமது பழக்க வழக்கங்களை குறிப்பிட்டுச் சொல்லும்போது அவர் நன்றாக பழகுவாா், பழகுவதற்கு நல்லவர், பண்பாக பேசி பழகுவாா், என பாராட்டுவதோடு சிலரோ அவர் பழக்கத்திற்கு லாயக்கில்லாதவர், அவரிடம் பழகுவது கஷ்டம் எனக்கூறுவாா்கள்.

அனைவரிடமும் அவரவர் நோக்கங்களுக்கேற்ப பழகவேண்டும் அதுதான் புத்திசாலித்தனத்திற்கு அழகாகும். எப்போதுமே இயல்பாக பேசி, பழகிவருபவர்களிடம் அளவுக்கு மீறாமல் பழகுவதோடு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக பழகுவதே காலத்திற்கும் நல்லசெயலாகும்.

எனவே அளவுக்கு மீறினால் அமிா்தமும் நஞ்சாகும் என்பதுபோல வரம்பு மீராமல் நிதானமான சொற்களைக்கொண்டு அடுத்தவர் மனது புண்படாத வகையில் நாம் நமது வாா்த்தைகளை, சொல்லாடல்களை, பயன்படுத்துவதே நல்லது.

இதையும் படியுங்கள்:
வெற்றி எனும் டானிக்: மற்றவர்க்கும் மருந்தாகும் உங்கள் முன்னேற்றம்!
Motivational articles

அதனால்தான் பொியவர்கள் நமக்கு பல வழிகளில் பண்பாடு கடைபிடித்து பழகுவதற்கு சொல்லிக் கொடுத்திருந்தாலும் அதை நாம் மனதில் உள்வாங்கி விவேகத்துடன் பண்பாடு கடைபிடித்து பழகிவருவதே சிறப்பான ஒன்று, என்பதோடல்லாமல், அதனால் நட்பும் உறவும் நீண்ட நாள் தொடரும் என்பதை மறக்காமல் இருப்பதே சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com