

உங்களுடைய வாழ்வில் குளறுபடிகள் என்கிற சூழல் காற்று அடிக்கும்போது, அவமானம் என்னும் புழுதி கிளம்பி, உங்களை தாக்குதல் நடத்திவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்யும்.
அதேபோல் உங்கள் வாழ்க்கையில், நீங்கள் மற்றவர்களை விட, ஏதாவது ஒரு செயலில் வேறுபட்டு புதியதாக சாதிக்க வேண்டுமெனில், பல இடங்களில் இருந்து இடையூறுகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
நீங்கள் ஒருபோதும் அவர்களின் வலையில் சிக்காமல், உங்கள் வழி தனி வழி என்று, உங்கள் நிலைப்பாடு மாறாமல் பயணியுங்கள். இடைப்பட்ட நேரத்தில் ஏற்ப்படும் தவறுகளை மட்டும் அவ்வப்போது களைந்து விட்டு, முன்னேற்றம் காணுங்கள்.
வாழ்க்கையில் உங்களுடைய குறைகளைச் சொல்லி, உங்கள் கூட இருந்தவர்கள் ஒரு நேரத்தில் அவமதித்தாலும் கவலைபடாமல் முன்னேறிச் செல்லுங்கள். நாளை உங்களுடைய வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்லும் நிலை மாறும்.
வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் ஒற்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவ்வளவு அவமானத்திற்கு உட்பட்டாலும், நீங்கள் சோர்ந்து போய் விடாமல் இருக்கப் பழகுங்கள். அவமானங்கள்தான் வெற்றியின் முதல்படி என்று எண்ணி முன்னேறுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் சில அடிப்படை படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் கேட்கும் சுகத்திற்காக இருக்கக்கூடாது. நல்ல விஷயங்களை அறிந்து நடந்துகொள்ளும் பயிற்சி பட்டறையாக இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் உங்கள் செயல்கள் அனைத்தும், மற்றவர்களிடம் புகழ் ஏற்ப்படுத்தும் எண்ணமாக மட்டும் இருக்க கூடாது. அவர்களுக்கும் வலு சேர்க்கும் வகையில், புதிய கருத்து கொண்ட விதமாக இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சிந்திக்கும் திறன் படைத்து, வளரும் மனிதனாக வாழ்ந்து காட்டுங்கள். அப்போதுதான், உங்களுக்கு காலம் எப்படி பொன் போன்றது என்பதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும்.
வாழ்க்கையில் அதிகம் சிந்திக்க கற்றுக் கொள்வதும், கற்றதை உயர்வாக நினைத்து எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொள்வதும் மற்றும் அதனை செயல்படுத்தும்போது, கவனமாக இருக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது.
வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நேர்மையுடனும், சுயநினைவுடனும் இருத்தல் மிகவும் அவசியம் என்பதை புரிந்துகொண்டு ஆற்றல் விதையுங்கள். அப்படி இருக்கும் போதுதான், உங்கள் உயர்ந்த சிந்தனையில் நேர்மறை எண்ணங்கள் உருவாகி, செயல் ஆற்றும் திறன் படைத்து, உங்கள் முயற்சி திருவினையாக்கும்.
வாழ்க்கையில் சில சமயங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த விரும்பும் வழியில் செல்ல முடியாமல் போகலாம். அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். அப்போது நீங்கள் செல்லும் வழி, உங்களுடைய வாழ்க்கைக்கு மாற்றம் தருவதாக இருக்கும் பட்சத்தில், அதையே நீங்கள் விரும்பும் வாழ்க்கையாக வடிவமைத்துக் கொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.
வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் நிதானமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு செயலாற்ற முடிவு எடுங்கள். மற்றவர்களை திருப்திபடுத்தும் நோக்கில், தடால் அடியாக செய்துவிட்டு, சிக்கலில் விழுந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் பொறுமை கடலினும் பெரியது என்று நினைத்து, அதற்கேற்ப நீங்கள் பொறுமையாக இருந்து, ஒவ்வொரு செயலிலும் வெல்லும் ஆற்றல் படைத்து, வாழ்க்கையை வென்று காட்டுங்கள்!