Motivational articles
The way to success

வெற்றிக்கான வழி: உங்களை நீங்கள் அறிந்து கொள்வது!

Published on

ருவர் தனது பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் பற்றி சரியாக முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைப்பற்றி ஒருவர் "சுயமதிப்பீடு" (Self Evaluation) செய்யும்போதுதான் அவரது உண்மையான நிலை தெரியும்.

நீ செய்வது சரியில்லை".

“உன்னிடம்தான் தவறு இருக்கிறது".

"நீங்கள் செல்லும் பாதை சரியானது அல்ல".

"உன்னை நீ மாற்றிக்கொள்ள வேண்டும்".

உனது நடவடிக்கைகள் வரவர சரியில்லை - என விமர்சனங்கள் அள்ளித்தெளித்து ஒருவரை மற்றவர்கள் ஆய்வு செய்கிறார்கள் என்றால், அவரிடம் குறை இருப்பதை அந்த நபர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பள்ளி - கல்லூரித் தோழர்கள் வெவ்வேறு நிலைகளில் விமர்சனங்களை ஒருவர் பெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. நமது பலவீனங்களை சரியாகத் அறிந்துகொள்ளாமல் இருந்தால் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது வெற்றி பெற்றவர்களின் அனுபவ வார்த்தைகள் ஆகும். பலவீனங்களைப்பற்றி தெரிந்துகொள்வதைப்போலவே ஒருவர் தனது பலத்தைப் மற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

என்னிடம் என்னென்ன திறமைகள் (The way to success) இருக்கிறது - என்று சிந்தித்து அதனை பட்டியலிட்டு அந்த திறனை அதிகப்படுத்த முயல வேண்டும். குறிப்பாக - பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய திறமைகளை இளம்வயதிலேயே இனம் கண்டுகொள்ள வேண்டும்.

என்னால் நன்றாக பாட முடியும். என்னிடம் மனப்பாடம் செய்யும் சக்தி உள்ளது". பிறருக்கு உதவுவது எனது பிறவிக்குணம்".

பெரியவர்களை மதித்து அவர்களது பேச்சை கூர்ந்து கவனித்து அதன்படி நடப்பது எனக்கு எப்போதும் நன்மை தருகிறது".

எனது பெற்றோர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். இப்படி மாணவ-மாணவிகள் தாங்கள் பலமாகக் கருதும் காரணிகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். தங்களின் பலத்தை அடையாளம் காணும்போதுதான் அவர்களை அறியாமலேயே அவர்களின் மனோபலம் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
யாருமே சொல்லாத வாழ்க்கையின் ரகசியங்கள்!
Motivational articles

"எனக்கு ஆதரவாக எனது உறவினர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள்" என்ற நல்ல நம்பிக்கை, இவர்களுக்கு மேலும் அதிக பலத்தைத் தருகிறது. இப்படி தனது பலம், பிறர் வழங்கும் ஊக்கம் ஆகியவற்றை மனதில்கொண்டு வாழும்போது, நல்ல நம்பிக்கை மனதில் பிறக்கிறது. இளம்வயதில் ஒருவர் பெறும் நம்பிக்கைதான் அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது.

"இந்தியாவின் தந்தை" என அழைக்கப்பட்ட 'மகாத்மா காந்தி', தனது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்துகொள்வதற்கு அடிக்கடி முயற்சிகளை மேற்கொள்வார். தன்னைத்தானே "சுய மதிப்பீடு" (Self Evaluation) செய்யும் வகையில் 'மவுன விரதம்' மேற்கொள்வார்.

மற்றவர்களிடம் ஓரிரு நாட்கள் பேசாமல் அமைதியாக இருக்கும் பழக்கத்தை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். வாரத்தில் ஒருநாள் இந்த மவுன விரதத்தையும், உண்ணாவிரதத்தையும் அவர் கடைபிடித்ததால், அவர் தனது நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தார்.

ஆகவே, ஒருவர் தனது பலம் பலவீனத்தை சுயமதிப்பீடு செய்தால் வெற்றிக்கனி நம்மை விட்டு அகலாமல் நம்முடனே தங்கிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com