
பொதுவாகவே வாழ்வில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. பெரும்பாலும் ஒத்த வயதுடைய மனிதர்கள் ஒரே உடலமைப்பு ஒரே மூளையை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் ஒருரிவர் மட்டுமே சாதிக்கிறார்கள். ஏன் வாழ்வில் அனைரும் வெற்றியடைவது இல்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
அதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள்தான். வாழ்வில் சாதித்தவர்கள் பின்பற்றும் முக்கியமான பழக்கங்களை நீங்களும் கடைப்பிடித்தால் நீங்களும் வாழ்வில் பெரிய மாற்றாத்தை காண்பீர்கள்.
வெற்றியை பரிசளிக்கும் சில நல்ல பழக்கங்கள்.
உளவியல் ரீதியான பிரச்னைகளில் இருந்த விடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி, இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது தினசரி 10 நிமிடங்கள் காலையில் தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது ஏனைய அனைத்து வேலைகளையும். புத்துணர்ச்சியுடன் செய்வதற்கு துணைப்புரியும்.தினமும் காலையில் சிறுது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யவேண்டும். சிறுது தூர ஓட்டம் அல்லது நடை அல்லது வீட்டிலே செய்யும் எளிய பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மன மற்றும் உணர்ச்சி ஆரோக்யத்தையும் அதிகரிக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். இன்று பெரும்பாலானவர்களின் வெற்றிக்கு பெரும் தடையாக இருப்பது சமூக வலைத்தளங்களின் அதிகரித்த நேரம் தான். தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்க்கும் நேரத்தை குறைப்பதன் மூலம், ஆக்கபூர்வமான செயல்களை செய்ய மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட போதிய நேரம் கிடைக்கும்.
தினசரி ஒரு மணி நேரம் ஏதாவது ஒரு புதிய விசயத்தை கற்றுக்கொள்வதற்கு முயற்சிசெய்யுங்கள். நமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், நாளுக்கு நாள் நமது அறிவுக்கு புதிய வேலைகளை கொடுக்க வேண்டியது அவசியம்.
மூளையை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கு தினசரி நாளிதழ் வாசித்தல் அல்லது 10 பக்கங்களாவது ஏதேனும் உபயோகமான புத்தகம் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தினசரி எழுதுவதை பழக்கமாக்குங்கள். அது சிறிய பதிவாகவோ அல்லது நாட்குறிப்பாகவோ இருக்கலாம். இது உங்கள் சிந்திக்கும் திறனை கூர்மைப்படுவதோடு, உங்களின் சுய விழிப்புணர்வை ஆழப்படுத்தும்.
நம்முடைய ஆளுமை திறமைக்கும், நம்முடைய தூக்க முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேபோல அதிகாலை எழும் பழக்கம் உடையவர்கள் அதிக ஒழுக்கமுடையவர்களாக விளங்குவது வார்விக் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாள் முழுவதும் ஆற்றலுடன் செயற்படுவதற்கு தினசரி 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.
இரவு 10 மணி தொடக்கம் காலை 5 மணிவரையில் நன்றாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த பழக்கம் முன்னேற்றத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுபவர்கள் வாழ்வில் வெற்றியாளராக பின்னாளில் திகழ்கிறார்கள் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பழக்கங்களை தொடர்ந்தால் நாளடைவில் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.