Lifestyle articles
Motivational articles

வாழ்க்கைப் பயணத்தை ஒளிரச் செய்யும் 6 நட்சத்திர வழிகாட்டிகள்!

Published on

1. வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

2. சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா...? என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறி கொடுக்கிறான்.

தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க மனிதனுக்கு அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவை தேடிக் கொள்கிறான்.

இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.

காரணம்!, அவைகளுக்கு வாழ்க்கையின் முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.

3. தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாதற்கு காரணம், அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது.

அது என்ன...? தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்...? அப்படி ஒன்று இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

4. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக்கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக்கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

இதையும் படியுங்கள்:
இன்றைய சூழலில் குடும்பப் பொறுப்புகள்!
Lifestyle articles

5. இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியை செய்துக்கொண்டிருக்கிறது...

ஆனால்!, இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாகி வருகிறது. எந்த ஆன்மீகமும் இவர்களை காப்பாற்றவில்லை.

6. வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே...! போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக்கொம்பே.

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்.

வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்; அதை வென்று காட்டுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com