இன்றைய சூழலில் குடும்பப் பொறுப்புகள்!

Family responsibilities!
Motivation articles
Published on

ன்று, நிறைய இல்லங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். பணிமுடிந்து வீடு திரும்ப இரவாகிவிடுகிறது. இருவருமே சோர்வு + சலிப்புடன்தான் நுழைகின்றனர். ரிலாக்ஸ் என்பது அரிதாகிவிடுகிறது. அதிலும், குடும்பத்தலைவிக்கு இரட்டைத் தலைவலி. பணிப்பெண் துலக்கி வைத்த பாத்திரங்களை அடுக்கவேண்டும். காய்ந்த துணிகளை மடிக்கவேண்டும். இரவு உணவைத் தயாரிக்கவேண்டும். பசங்களுக்கு ஹோம் ஒர்க் பண்ண ஹெல்ப் பண்ண வேண்டும். அந்தக் காலத்தில் இப்போபோல் ஹோம் ஒர்க் ஹெவியாக இருக்காது. புராஜெக்ட் கிடையாது. அவர்களே வீட்டுப் பாடம் முடித்து விடுவார்கள். சந்தேகம் இருந்தால் பக்கத்து வீட்டினர் உதவுவர். இப்போ, அக்கம் பக்கம் எல்லோருமே இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா இயல்பு நிலை மாறி வெடித்துவிடுகிறாள். அப்பா எதையும் கண்டுகொள்வதில்லை அல்லது தனக்கும் கோபப்படத் தெரியுமென கத்துவார். பிள்ளைகள் திணறுகிறார்கள்.

சரி, இதை எப்படி சரி செய்வது? நாற்பது வருடங்களுக்கு முன் குடும்பத் தலைவர் மட்டுமே வேலைக்குச் செல்வார். தலைவி, வீட்டு வேலைகளுடன், குழந்தைகளின் படிப்பு, மின் கட்டணம், ரேஷனில் பொருட்கள் வாங்குவது முதலான பொறுப்புகளை செவ்வனே கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நேரம் கிடைத்தது. தேவைகளும் கம்மியாகவே இருந்தது. அப்பப்போ ஏற்படுகிற பொருளாதார பிரச்னை தவிர பெரிய டென்ஷனை சமாளிக்கும் சந்தர்ப்பங்கள் கிடையாது.

பிள்ளைகளும், அளவான ஆசைகளோடு குடும்ப நிலைமை புரிந்து வளர்ந்தார்கள். கேட்டுக் கிடைக்காவிட்டால், ஏற்றுக்கொண்டார்கள். இன்று நிலைமையே வேறு? அதை சரி செய்ய குடும்பத்தினர் அனைவருமே ஒற்றுமையாய் பிளான் போட்டு செயலில் இறங்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கான 3 மந்திரங்கள்!
Family responsibilities!

அன்று, ஆடம்பரம் என்று நினைத்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், டூ வீலர், ஸ்டடி டேபிள் ஆகியவை அத்தியாவசியமாகி விட்டது. ஸ்டேட்டஸ் கருதியும் டைனிங் டேபிள், ஷோபா, டி.வி போன்றவையும் தேவையாகிவிட்டது. ஸ்கூல் பீஸ் கட்டணம், யூனிபார்ம், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், ஷூ என செலவு விழி பிதுங்க வைக்கும்போது லோன் வாங்குவது தேவையாகிவிட்டது. எளிதாகவும் கிடைக்கிறது. கடனை அடைக்க மாதா மாதம் EMI கட்ட வேண்டுமே. வழியே இல்லை. குடும்பத் தலைவியும் சம்பாதிக்க வேண்டும். தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிடில் அருகில் உள்ள மால், மருத்துவமனை, ஜவுளிக்கடை, ஜுவல்லரி என பணியில் அமர்ந்துவிடுகிறாள். இல்லாவிடில் வீட்டிலிருந்தே சிறு தொழிலை ஆரம்பிக்கிறாள்.

இங்கேதான் குடும்பத்தினரிடம், புரிதலும், உதவுதலும் வேண்டியிருக்கிறது. வீட்டு வேலைகளையும், கடமைகளையும் பிரித்துக்கொள்ளலாம். அப்பா, E.B. கட்டணம், வீட்டு வரி போன்ற வெளி வேலைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒட்டடை அடித்தல், டி.வி துடைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளையும் செய்யலாம்.

பிள்ளைகளும் முடிந்த அளவு துணையாக இருக்கலாம். தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யலாம். பெண் குழந்தை இருந்தால், அம்மா வருமுன் குக்கரில் சாதம் வைக்கலாம். துணிகளை மடிக்கலாம். ஆண் பிள்ளைகள் பலசரக்கு மற்றும் காய்கள் வாங்கி வந்து அன்னையின் பளுவைக் குறைக்கலாம். குடும்பத்தினர் அனைவரும் காலையில் வழக்கத்தைவிட அரைமணி முன்னதாக எழுந்தால், அன்றைய நாள் சுமூகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆண் குழந்தை, பெண் குழந்தை - பொம்மைகளில் ஏன் பாகுபாடு? இது சரியா?
Family responsibilities!

குடும்பம் என்பது எல்லோரும் இணைந்த ஒன்று. தங்களுக்கும் அதன் கஷ்ட நஷ்டங்களில் பொறுப்பேற்கும் கடமை உண்டு. எளிமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் பாலன்ஸ் செய்து சமச்சீரான நோக்குடன் வாழ முயற்சி எடுக்கணும்.

ஒரேயடியாக ஓடவேண்டாம். அதேசமயம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்தோமானால் பிரச்னைகளுக்கு தடா போட்டு சமச்சீராக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com