நிலையான மனப்பக்குவமே நிம்மதியான வாழ்வு!

lifestyle articles
Motivational articles
Published on

னிதன் எவ்வளவுதான் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் சில சமயங்களில் கஷ்டங்களை அனுபவித்தாலும் அவனன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதே நடைமுறை. அதுவே நெறிமுறையும்கூட.

இறைவன் துணை இல்லாமல் எதுவும் அசையாது என்பது உண்மை. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே, அறிவாய் மனிதா நின் ஆணவம் பொிதா, என திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும் அதேபோல அனைத்து இயக்கங்களும் ஆண்டவனால் மட்டுமே இயங்குகிறது என்பதே நிஜம்.

அதேநேரம் நமக்கு வெற்றி மீது வெற்றி சேரும் சமயங்களில் ஆண்டவன் செயல் என்கிறோம். அப்போது துன்பம் வந்தால் நாம் ஆண்டவணையே வெறுக்கிறோம். அது தவறான முன்னுதாரணமாகும். இப்போதும் எப்போதும் நமது தூய்மையான எண்ணம் ஊசலாடக்கூடாது. தாமரை இலை தண்ணீா்போல தத்தளிக்கவும் கூடாது. மனிதனிடம் ஒரே வகையான நிலைபாடு இருப்பதே நல்லது.

இந்நிலையில் நமது எண்ண ஓட்டத்தில் தூய்மையும் நோ்மையும் நிறைவாகவே இருக்கவேண்டும். எந்த தருணத்திலும் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் நமது நிலைபாடுகளில் இருந்து மாறவே கூடாது. அதேபோல அடுத்தவர்கள் பொருள் மற்றும் சொத்துக்களின் மீது நமக்கு எந்த சூழலிலும் எந்த காலகட்டத்திலும் ஆசை எனும் முள்செடி வளரவே கூடாது.

அது மிகப்பொிய ஆபத்தானதாகும் மேலும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்ற நிலைபாடு நம் ரத்தத்திலேயே ஊறவேண்டும். யாராவது உதவி கேட்டு வந்தால் நமது சக்திக்கு உட்பட்டு அளவு மீறாமல் உதவலாம். பொதுவாகவே பரந்த மனப்பக்குவம் நம்மைவிட்டுஅகலாமல் பாா்த்துக்கொள்ள வேண்டு்ம். அதுபோலவே துன்பங்கள் தோல்விகள் வரும் நிலையில் துவண்டுவிடவே கூடாது.

தோல்வி கண்டு சோா்வும் வெற்றி கண்டுஅகம்பாவமும் வரவே கூடாது. யாாிடமும் எடுத்தேன் கவிழ்த்தேன்என அவர்களது மனது புண்படும்படியான வாா்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அதுவே நல்ல விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
வெற்றி உங்கள் கையில்: திட்டமிடலும் துணிச்சலும்!
lifestyle articles

ஆக தெய்வத்தின் துணையோடு நல்ல எண்ணத்துடன் தன்னம்பிக்கை எனும் விதையை நமது வாழ்வு எனும் நிலத்தில் புதையுங்கள், அதற்கு ஆசை எனும் வெந்நீரை ஊற்றாமல் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற உயரிய பண்பாடான நல்ல நீரை ஊற்றி வளா்க்கவேண்டும்.

அப்போது அகம்பாவம் மற்றும் பிறர் மனம் புண்படும் படியான வகையிலான பேச்சு எனும் களையை அகற்றினால் நல்ல வாழ்க்கை எனும் பயிா் வளர்ந்து அமோக விளைச்சலைத்தருமே!

எந்த ஒரு காாியத்தை துவங்கினாலும் நிதானம் கவனச்சிதறல் இல்லாமல் பாா்த்துக்கொள்வதும் சாலச்சிறந்த ஒன்றாகும்.

ஆக நீதி நெறிமுறை தவறாமல் வாழ்ந்து வந்தாலே தெய்வத்தின் அருள் நம்மை விட்டு அகலவே அகலாது என்பதே வேத தத்துவமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com