உங்களுக்கு நேரம் போதவில்லையா? நேர நிர்வாகத்தில் உள்ள சவால்கள் என்னென்ன?

time management
Motivational articles
Published on

நேர மேலாண்மை என்பது சரியான நேரத்தில் செயல்பட்டு, பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பதாகும். இது ஒருவரது தனி மனித வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 

நம்முடைய சிறுவயதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எங்கு சென்றாலும் சரியான நேரத்திற்கு செல்வதன் முக்கியத்துவத்தை நமக்கு சொல்லியுள்ளனர். இருப்பினும் நமக்கு வயதானதும் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனிப்பதில்லை. வாழ்க்கையின் பல விஷயங்கள் இந்த நேரம் மேலாண்மையின் முக்கியத்துவத்தில் அடங்கியுள்ளது.  

நாம் சரியான நேரத்தில் செயல்படுவதற்கு நேர மேலாண்மை அதிகம் தேவைப்படுகிறது. தங்களின் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பவர்கள், தங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதிலும், முக்கிய செயல்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் திறம்பட செயல்படுகின்றனர். இந்த நேரம் மேலாண்மை தனிநபர்கள் தங்களின் இலக்குகளை சரியாகக் கொண்டுசென்று அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

என்னதான் நேரமேலாண்மை நமக்கு பல நன்மைகளை அளித்தாலும், முற்றிலும் நவீன மயமான இந்த சமுதாயத்தில் அதைப் பராமரிப்பது சவாலானது. குறிப்பாக, கவனிச்சிதறல்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் போன்றவை திடீரென உள்ளே நுழைந்து நமது திட்டங்களை சீர்குலைக்கலாம். இருப்பினும் இத்தகைய சவால்களை, நேரத்தை சரியான முறையில் திட்டமிடுவது மூலமாக நம்மால் சமாளிக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையே கேள்விக்குறியாகும்போது... என்ன செய்வது?
time management

நேர மேலாண்மை ஒரு நபரின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில் வெற்றியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது ஒரு தனிநபரின் நம்பகத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பிரதிபலிக்கும் சிறந்த பண்பாகும். அதே நேரத்தில் இந்த பண்பு ஒருவரின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி சிறப்பாக வளர வைக்கிறது. நேரம் மேலாண்மையில் பல நன்மைகள் இருந்தாலும் அதன் சவால்களை ஒப்புக்கொள்வது அவசியமானதாகும். எனவே, நேரம் மேலாண்மையின் அற்புதத்தை உணர்ந்து, அதை நம்முடைய வாழ்வில் முறையாகப் பயன்படுத்தினால், தன்னிறைவு, தொழில்முறை வெற்றி போன்ற பல விஷயங்கள் கிடைக்க அது வழி வகுக்கும்.

நேரம் மேலாண்மை என்பது சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல, நம்முடைய நேரத்தை முறையாக மதிப்பிடுவதும்தான். மேலும், மற்றவர்களின் நேரத்தையும் மதித்து அனைவருக்குமான சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com