

நாம் அன்றாடம் பயணிக்கும் வாழ்க்கை முறையில்தான் எத்தனை எத்தனை விஷயங்கள் அடங்கி உள்ளன. அத்தனையும் நமக்கு தொியவில்லை. ஆனால் படிப்படியாக நாம் தொிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் வாழ்க்கையானது அவ்வளவு எளிதானதல்ல. அது நிறைய சவால்களை தன்னகத்தே வைத்துள்ளது. அதை நாம் தொிந்து கொள்ளவேண்டும் எதையும் நாம் சந்திக்கவேண்டுமல்லவா!
மேலும் தடைகள் பல வந்தாலும், அதை எதிா்கொள்ள வேண்டும். இதைத்தான். "சாமுவேல் பட்வர்" என்ற அறிஞர் வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் கலை" என கூறியுள்ளாா். அவரது கூற்றின்படியே வாழ்க்கை என்பது கலைதான். அது ஒரு நாடக மேடைதான். அதில் நாமெல்லாம் வேஷம் கட்டி நடிக்கத்தான் வேண்டியுள்ளது.
அத்தகைய நடிப்பு பலருக்கு பலவிதமான அனுபவங்களை கற்றுத்தரவல்லது. நாடகம் மற்றும் திரைப்படங்களில் கதாநாயகன் பாத்திரம் என ஒன்று இருந்தால், வில்லன் பாத்திரமோ அல்லது, மெகா தொடா்களில் வருவதுபோல குடும்பத்திலேயே இருந்து கொண்டு சூழ்ச்சிவலை பிண்ணக்கூடிய நபர்களும் உண்டே!
அது வகையில் நம்முடனேயே பழகி நமக்கு குழிதோண்டும் நபர்களும், நட்பு மற்றும் உறவு வகைகளில் வருதும் போவதுமாக இருப்பதே நடைமுறை அத்தகைய போலியான நயவஞ்சகமான உறவுகளின் வேறு ஒரு முகம் நமக்கு தொிய வரும்போது மனதில் ஏற்படும் வலி, மற்றும் காயங்களுக்கு, மருந்தே இல்லை.
நன்றி மறந்த உலகில் வஞ்சக பூமியில் வெள்ளந்தியாய் எப்படி வாழ்வது? வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுமே! இதுபோன்ற சூழலில் நாம் நமது நிதானத்தையும் கோபதாபங்களையும் தவிா்த்து, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து விலகிவிடுவதே நல்லது. பொதுவாகவே நன்றிமறந்த உலகமாகிவிட்டதே நிஜம், மற்றும் நிதர்சனம்.
பொதுவாக நமது எண்ணங்களையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொண்டு மனம் சோா்வடையாமல் பாா்த்துக்கொளவதே நல்லது.
ஆக திரு வி க அவா்கள் சொன்னது போல "சோா்வு என்பது மனிதனைக்கொல்லும் நஞ்சு" என்ற வாக்கியதிற்கேற்ப எங்கும் எதற்காகவும் சோா்ந்து போய்விடாமல் துணிச்சலாய் வாழ்ந்து பாா்க்கவேண்டும். அதுவே சிறப்பானது!