அணுகுமுறையை மாற்று: மாயா ஏஞ்சலோவின் வெற்றிக்கான மந்திரம்!

Maya Angelou
Motivational articles
Published on

டினமான காலங்களில் கூட நம்மை மேம்படுத்த மற்றும் ஊக்குவிக்க உதவும் மாயா ஏஞ்சலோ அவர்களின் 10 முக்கியமான கோட்பாடுகள்:

கவிஞர், நடனக் கலைஞர், பாடகி, ஆர்வலர் மற்றும் அறிஞர் என போற்றப் படும் மாயா ஏஞ்சலோ உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் தனது தனித்துவமான மற்றும் முன்னோடியான சுயசரிதை எழுத்திற்காக மிகவும் பிரபலமாக திகழ்ந்தார்.

உலகளவில் மாயா ஏஞ்சலோ என்று அழைக்கப்படும் மார்குரைட் ஆன் ஜான்சன் அவர்கள், ஏப்ரல் 4, 1928 அன்று மிசோரியின் செயிண்ட் லூயிஸில் பிறந்தார். அவருடைய பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்ட விவாகரத்து காரணமாக, ஏஞ்சலோ சிறு வயதிலேயே ஆர்கன்சாஸின் ஸ்டாம்ப்ஸில் தனது தந்தைவழி பாட்டியுடன் வசிக்கச் சென்றார். அவருடைய மூத்த சகோதரர் பெய்லிதான், ஏஞ்சலோவுக்கு "மாயா" என்ற செல்லப்பெயரைச் சூட்டினார்.

ஏஞ்சலோவின் எழுத்து மற்றும் ஆங்கில மொழி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே அவர் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுத தொடங்கினார்.

30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவரும், 50க்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்களைப் பெற்றவருமான மாயா ஏஞ்சலோ, சகிப்புத்தன்மை மற்றும் மீள்தன்மையின் சின்னமாகத் திகழ்ந்தார்.

1970 ஆம் ஆண்டு ஏஞ்சலோ தனது 41 ஆம் வயதில், தன்னுடைய முதல் புத்தகமான “ I Know Why the Caged Bird Sings” ஐ எழுதினார்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி நாம் படிக்கும் போது, நமக்கு துன்பங்களை எதிர்கொண்டு ஒருபோதும் சோர்வடையாமல் இருப்பதற்கான உத்வேகத்தை கொடுக்கும்.

ஏஞ்சலோ அவர்கள் 2014 இல் தன்னுடைய 86 வயதில் இறந்தார். ஆனாலும் , அவருடைய வார்த்தைகளும் கோட்பாடுகளும் காலத்தால் என்றுமே அழியாது. அவருடைய முக்கியமான 10 கோட்பாடுகளை இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மனசாட்சி: நம் ஆத்மாவின் உண்மையான அடையாளம்!
Maya Angelou

"உனக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்று. உன்னால் அதை மாற்ற முடியாவிட்டால், உன் அணுகுமுறையை மாற்று."

"உங்களுக்கு நீங்களே கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று: மன்னிப்பது. அனைவரையும் மன்னியுங்கள்.

"நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் அவர்களை எப்படி உணரவைத்தீர்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்."

"நீங்கள் எப்போதும் இயல்பாக இருக்க முயற்சித்தால், நீங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள்."

"உங்களுக்கு நன்றாகத் தெரியும் வரை உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பின்னர் நீங்கள் நன்றாகத் தெரிந்தவுடன், சிறப்பாகச் செய்யுங்கள்."

"வெறுப்பு, இது உலகில் நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இன்னும் ஒன்றை கூட தீர்க்கவில்லை.

"நீ வாழப் போகிறாய் என்றால், ஒரு மரபை விட்டுச்செல். உலகில் அழிக்க முடியாத ஒரு முத்திரையைப் பதி.

"உங்களுக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் அவற்றால் குறைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்யலாம்."

இதையும் படியுங்கள்:
மனித மனங்களில் மனிதம் பூக்கட்டும்!
Maya Angelou

"நாம் பட்டாம்பூச்சியின் அழகில் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் அந்த அழகை அடைய அது செய்த மாற்றங்களை அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம்."

"வாழ்க்கை நடத்துவது என்பது வாழ்க்கையை நடத்துவதற்குச் சமமானதல்ல என்பதை நான் கற்றுக்கொண்டேன்."

மாயா ஏஞ்சலோ அவர்களின் வார்த்தைகள் நமக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தெளிவை தருகின்றன மேலும் அவருடைய வாழ்க்கை மீள்தன்மை, படைப்பாற்றல் மற்றும் இரக்கத்திற்கு ஒரு சான்றாகவும் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com