
பணம், வெற்றி குறித்த எண்ணங்களைப் போலவே வறுமை தோல்வி குறித்த எண்ணங்களையும் நாம் துரிதமாய் யதார்த்தத்தில் கொண்டுவர முடியும். நம்மைப் பற்றிய நமது மனோபாவம் பெரியதாய், அடுத்தவர்மீது கொள்கிற மனோபாவம் பெருந்தன்மையும் கருணையும் மிக்கதாய் இருக்க வேண்டும். அப்போது - வெற்றியின் கணிசமான பகுதி உங்கள் கைக்கு வந்துவிடும்.
அடுத்தவருடைய எதிர்வினைகளைக் கணக்கில் கொள்ளுங்கள், அவற்றைக் கூர்ந்து அறியும் திறன் கொண்டவராய் இருங்கள். உங்கள் எதிர்வினை களிலுந்தான். உங்கள் உணர்வு சார்ந்தவெளிப் பாடுகளைக் (Emotional responses) கட்டுப்படுத்தினால் இது சாத்தியம்.
எண்ணம் மற்றும் செயல்சார்ந்த சரியான பழக்கங்களை போக்குகளை (Habits) வளர்த்துக் கொள்ளுங்கள். எந்தக் குறிக்கோளையும் உங்களால் அடையமுடியும் என்று நம்புங்கள், உண்மையிலேயே நம்புங்கள்.
ஒவ்வொரு வெற்றிக்குப்பிறகும் உங்களுடைய அறிவும், அனுபவமும் வெற்றியின் அளவும் (Status) உயர்கிறது. ஆக்கபூர்வ மனோபாவத்துடன் ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் எதிர்கொண்டு, சமாளித்து வெற்றி கொள்கிறபோதும் மேலும் சிறந்தவராய், வெற்றிகரமானவராய் ஆகிவிடுகிறீர்கள்.
நீங்கள் செய்கிற வேலையில் தோற்பதைவிட வெற்றி பெறுவது எளிது, அது முதலில் அப்படித் தோன்றாது என்றாலும்.
தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை, அறிவுத்திறன், விடாமுயற்சி மற்றும் ஆக்கபூர்வ மனோபாவம் இவற்றுடன் அணுகினால் எந்தத் தடையையும் நீங்கள் கடக்க முடிம்.
நீங்கள் ஒரு பிரச்னை அல்லது சந்தர்ப்பத்தைச் சரியான மனோபாவத்துடன் அணுகினால் உங்களுடைய சக்திகள் அனைத்தையும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயலின் மீது செலுத்த முடியும், அவ்விதமாய் அந்த வேலையைச் செய்து முடிக்கலாம். அவ்வப்போது பின்னடைவுகள் ஏற்பட்டாலும், வெற்றி நிச்சயம், உங்களிடம் ஆக்கபூர்வ மனோபாவம் இருக்கிறதே! இந்த மனோபாவம் இருந்தால் போதும், தகுதியான காரியங்களை எளிதாய்ச் செய்து முடித்துவிடலாம்.
எல்லாம் உங்களுடைய எதிர்பார்ப்பினைப் (Expectation) பொறுத்தது.
நடக்கும் என்று நினைத்தால் அது நடக்கிறது, கிடைக்கும் என்று நம்பினால் அது கிடைக்கிறது. நாம் வெற்றி பெறுவோம் என்று நம்பினால் வெற்றி பெறுகிறீர்கள். நம்முடைய சுற்றுப்புறம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூழ்நிலை நம்மைத் தூண்டுகிறது. நாம் பிறக்கும்போதே எதிர்மறை சிந்தனைகளோடு பிறந்துவிடவில்லை. அப்படி செய்யுமாறு போதிக்கப்படுகிறோம்.
உங்களிடமிருக்கும் அவநம்பிக்கைக்கும் 'ஹலோ' சொல்கிற அளவு உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கவேண்டும். இதனை விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்திலும் பயின்று, பழக்கப்படுத்திக் கொண்டுவிடுங்கள்.