"எல்லாம் நன்மைக்கே'' என்று சொல்லிப் பாருங்களேன் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

னக்கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மனநோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த கற்பனையாகச் சொல்லப்பட்டது தான் ''எல்லாம் நன்மைக்கே'' என்ற தன்னம்பிக்கை வாசகம்.

மன்னர் ஒருவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். மன்னரின் நண்பர், வாழ்க்கையில் எது நடந்தாலும், எல்லாமே நல்லதுதான்' என்பார்.

ஒருநாள் மன்னரும் நண்பரும் வேட்டைக்குச் சென்றார்கள். மன்னர் பயன்படுத்தும் துப்பாக்கியைத் துடைத்துத் தோட்டாக்களைப் போட்டுக் கொடுத்தார் நண்பர். 

மன்னர் துப்பாக்கியை எடுத்துச்சுட, அது வெடித்து, மன்னருடைய கட்டைவிரல் துண்டானது. வலியில் மன்னர் துடிக்க, அந்த சூழ்நிலையிலும் அந்த நண்பர் இதுவும் நல்லதுதான் என்றார்.

மன்னருக்குக் கோபமும் எரிச்சலும் தாங்கவில்லை. ‘இல்லை... இது நல்லது இல்லை’ என்று கூறி அந்த நண்பரை சிறையில் தள்ளினார். ஓர் ஆண்டு கழிந்தது. மன்னர் மீண்டும் வேட்டைக்குச் சென்றார். 

இந்த முறை அவர் போகக்கூடாத ஒரு பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே சில காட்டுவாசிகள் மன்னரைப் பிடித்து, அவர்களது கிராமத்துக்குக் கொண்டு போனார்கள். 

இந்தக் காட்டுவாசிகளோ, மனிதர்களைக் கொன்று மனித மாமிசத்தைச் சாப்பிடுவார்கள். அதன்படி மன்னரைத் தங்கள் குல தெய்வத்துக்கு நரபலி கொடுத்து அவரை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார்கள். 

மன்னரை ஒரு தூணில் கட்டி, அவரைச் சுற்றி விறகுகளை அடுக்கி, தீ மூட்ட அருகில் வந்த போது, மன்னருக்கு ஒரு கட்டைவிரல் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். 

அவர்களுடைய சம்பிரதாயப்படி அங்ககீனம் உள்ளவர்களை நரபலி கொடுக்கக் கூடாது. ஆகவே, அவரை விடுதலை செய்து விட்டார்கள். 

மன்னர் அரண்மனைக்குத் திரும்ப, எத்தகைய சூழலில் தன் கட்டை விரலை இழக்க நேரிட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.

அப்போது நண்பருக்குதான் இழைத்த கொடுமையும் நினைவுக்கு வந்தது. உடனே சிறையில் அடைக்கப்பட்ட தன் நண்பரை விடுவித்தார். 

இதையும் படியுங்கள்:
ரசனை என்பது என்ன?
motivation articles

‘அன்றைக்கு நீ என் கட்டைவிரல் துண்டான போது, ‘இதுவும் நல்லதுதான்’ என்றாய். அதனால்தான் இன்று என் உயிர் காப்பாற்றப்பட்டது என்று நடந்தவற்றைச் சொன்னார். அப்போது நண்பர் மீண்டும், ‘இதுவும் நல்லதுதான்’ என்றார். ‘என் ஆருயிர் நண்பரையே நான் சிறையில் அடைத்துவிட்டேன். இதையும் நல்லது என்று எப்படிச் சொல்கிறாய்?’ என்று மன்னர் கேட்டார். 

அதற்கு நண்பர், ‘நான் இன்று சிறையில் இல்லை என்றால், உங்களோடு காட்டுக்கு வந்திருப்பேன். அந்தக் காட்டுவாசிகள் என்னைப் பிடித்து இருப்பார்கள். நான் அங்ககீனம் இல்லாதவன் இந்நேரம் என்னைப் பலி கொடுத்திருப்பார்கள். 

என்னை நீங்கள் சிறையில் அடைத்து வைத்ததால்தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்றாராம்!

எப்போதுமே நேர்மறை (Positive -) ஆக ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். நம்பிக்கையோடு இருந்தால் தீமையிலும் நன்மை விளையும். சோதனைகளைக் கடந்து எத்தகைய சூழ்நிலையிலிலும் நாம் வெற்றி கொள்ளலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com