உங்கள் வாழ்க்கை உங்களிடம் வசப்பட வேண்டுமா?
உங்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும், தங்கள் ஆளுமையை, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்:-
உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வருகிறதோ, அதைவிட குறைவாக வீட்டுச் செலவைச் செய்து, கொஞ்சம் பணத்தைச் சேமிக்கவும் செய்யலாம். அது உங்களுக்கு தக்க சமயத்தில் உதவும். அதுவே உங்கள் மாத வருமானம் 10,000 ரூபாயாக இருந்து, நீங்கள் 15,000 ரூபாய் செலவு செய்தால் அவசர செலவுக்கு மற்றவரிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். தெரிந்த உண்மைதான் என்றாலும் நம்மில் பலர் இதை அலட்சியமாகக் கருதுகிறார்கள்.
உங்களுக்குள் தன்னம்பிக்கை, ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை தோல்வியைக்கண்டு துவளாதீர்.
மற்றவர்கள் தங்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீரோ அதேபோல் நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி அடுத்தவர் உங்களிடம் நடந்து கொள்ளாதபோது தங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சும், ஆகவே அடுத்தவரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
என்றுமே மனதளவில் சோர்வு அடையாதீர்கள். எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். ஏனெனில் மனத் தளர்ச்சிதான் தோல்விக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் தோல்வி பெற்றதாகக் கருதிவிடாதீர்கள். ஏனெனில் இந்த ஒரு சிந்தனையே உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகிவிடும்.
எப்போதும் உங்கள் வீட்டு விஷயம் மற்றும் மனதில் உள்ளதை அடுத்தவரிடம் சொல்லாதீர். அடுத்தவர் பேசுவதைக் காது கொடுத்து கேளுங்கள்.
வாழ்க்கையில் என்ன முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும், நீங்கள் சுயமாக எடுங்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு முடிவெடுக்க வேண்டாம்.
தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் எப்போதாவது ஏதாவது தவறு செய்துவிட்டால் அந்த தவறை ஒப்புக்கொள்ள தயங்காதீர். உங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தவறை ஒப்புக் கொண்டால் தரம் தாழ்ந்துபோய் விடமாட்டோம்.
உங்களுக்கு ஒருவர் வேலையில் உதவி செய்தால் அவரை அழைத்து அவசியம் பாராட்டவும். வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலும் தைரியத்தை இழக்காதீர்.
யாராவது உங்களை விமர்சித்தால், உங்கள் மனக்கட்டுப்பாட்டை இழந்து அவருடன் சண்டை போடாதீர். உங்கள் வேலை எதுவாக இருப்பினும் அதனை ரசித்து முழு மனதோடு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும் சிரித்துப் பேசுங்கள். என்னதான் பிரச்னை இருந்தாலும் அது மற்றவருக்குத் தெரிந்து அதனால் மற்றவர்கள் பாதிக்காதவாறு நடந்துகொள்ள வேண்டும்.
இதையெல்லாம் செய்து பாருங்கள் வாழ்க்கை நிச்சயமாக உங்கள் வசப்படும்.