உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? 'பசுமைப் புரட்சி' என்றால் என்ன தெரியுமா?

Motivational articles
Change your life
Published on

வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைதான். அன்றாட கூலி வேலை செய்பவராக இருந்தாலும் சரி, மேனேஜராக இருந்தாலும் சரி, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும் ஒரு மாற்றத்தை நிச்சயமாக எதிர்பார்ப்பார்கள். ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதற்கு போரடித்து போய்விடும். ஆகவே எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எதாவது ஒரு பெரிய மாற்றத்தை  தீடிரென சந்திக்கும்போது அதுதான் நம் வாழக்கையின் புரட்சி ஆக கருதப் படுகிறது.

புரட்சி என்றால் தற்போதைய நிலைமையை தலைகீழாக புரட்டி போட்டு முற்றிலும் மாறக்கூடிய ஒரு நிலையாகும்.

சரி இந்த புரட்சி ஏறுவரிசையிலா அல்லது இறங்கு வரிசையிலா அல்லது நல்ல விதத்திலா அல்லது கெட்ட விதத்திலா? எப்படி இருக்க வேண்டும்? கண்டிப்பாக ஏறுவரிசையில் நல்ல விதமாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நமக்கு நன்மை பயக்கும் மேலும் அத்தகைய புரட்சிதான் பசுமை புரட்சி ஆகும்.

ஒரு குழந்தையை எடுத்து கொண்டால் தினமும் ஒரே பொம்மையோடு விளையாடி அந்த குழந்தைக்கு போரடித்து போய்விடும். ஒரு புதிய பொம்மையை, பழைய பொம்மையை விட இன்னும் சற்று அழகான பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேயானால் அந்த குழந்தையை பொருத்தவரை அதுதான் பசுமை புரட்சி. மாறாக இப்போதிருக்கும் பொம்மையைவிட இன்னும் கிழிந்த மிக பழமையான பொமாமையை கொடுத்தால் அந்த குழந்தையின் முகம் எப்படி இருக்கும்? சற்று சிந்தித்து பாருங்கள்... அந்த குழந்தையின் மனதில் உற்சாகமே இருக்காது.

அதைப் போலத்தான் இளைஞர்களே, புரட்சி வேண்டும் என்று நினைத்து கண்டதைஎல்லாம் செய்யக்கூடாது. நிதானமாக யோசித்து ஆராய்ந்து நீண்ட நாளாக தொடர்ந்து நம்பிக்கையோடு செய்தால் தான் நல்ல விதமான புரட்சி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் அதிபுத்திசாலி என மற்றவர்கள் நினைக்க வேண்டுமா? இந்த உளவியல் டிப்ஸ் போதுமே!
Motivational articles

ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு மேலுக்கு மேல் பணத்தை போட்டு பிசினஸ் செய்தீர்களேயானால் தற்போதைய நிலைமை உல்டாவாக மாறி கோபுரத்திலிருந்து கீழே தள்ளப் படுவீர்கள். இதுவும் ஒரு விதமான புரட்சி தான். இந்த புரட்சியானது மேலிருந்து உங்களை புரட்டி போட்டு கிழே தள்ளிவிடும்.

உண்மையான புரட்சி எது என்றால் உங்களின் கீழ் நிலையை புரட்டி போட்டு மேல்நிலைக்கு எடுத்து  செல்ல வேண்டும்.

இது மட்டுமில்லாமல் நம்முடைய கீழ்த் தரமான எண்ணங்களும் புரட்ட பட்டு மேல் நோக்கு பார்வையை அடைய முயற்சி செய்யவேண்டும்.

ஆகவே நம்முடைய எல்லா நிலையிலும் முன்னேற்றத்தை அடையும் வகையில் செய்வதற்கு பெயர்தான் பசுமை புரட்சி.

ஆகவே, நாம் நமக்காக மட்டுமல்லாமல் உறவினர்கள், சுற்றி இருப்பவர்கள், நண்பர்கள் என‌ ஒட்டு மொதாத சமுதாயத்தையும் மாற்றி ஒரு புரட்சியை செய்வோம்... பசுமையான வாழ்க்கையை வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com