
வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது தவணை முறையில்தான் வரும். தோல்விக்கும் ஒரு எல்லை உண்டு. அதேபோல வெற்றிக்கும் ஒரு விளிம்பு உண்டு.
அபரிமிதமான வெற்றி என்பது வரும் நிலையில் அதை நாம் தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றலை வளா்த்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்று வரும் நிலையில் அதை லாவகமாக கையாளும் யுக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மால் ஒரு காாியத்தை செய்ய முடியாமல் போகிற நிலையில் அடுத்தவர் அதை இலகுவாக செய்துவிடுவாா். ஆக அந்த வெற்றிக்கான வழி நம்மை விட்டு ஏன் கைமாறிப்போனது என்பதை நாம் சிந்திக்க வேண்டுமே!
அதற்காக அவரால் எப்படி முடிந்தது என்ற வினாவிற்கு விடை கான வேண்டுமே தவிர அவரைக்கண்டு நாம் எாிச்சல் அடையக்கூடாது.
அதேபோல நம்மால் முடியாது என்ற காாியத்தை அடுத்தவர் செய்து முடித்துவிட்டாரே என விசனப்பட்டு துவண்டு விடக்கூடாது .
இதுதான் வெற்றி, தோல்வி என்பது தவணை முறையில் வரும் போகும். இதிலிருந்துநாம் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.
வரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தாமல் அலட்சியமாக விட்டு விடக்கூடாது. அப்போதுதான் நம்மால் நம்முடைய இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.
தவக்களையோ, தேரையோ, நாம் அடிக்க முற்படும் நிலையில் தத்தித் தத்தி தாவிக்கொண்டே போய் நம்மிடம் இருந்து தப்பித்துவிடும். ஆக அது தன்னுடைய இலக்கை மறக்காமல் உத்வேகத்துடன் செயல்படுகிறது.
அதுபோலவே நாமும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தித்தத்தி வெற்றியை நோக்கி பயணப்படவேண்டும். முழுமையான வெற்றி உடனே கிடைத்துவிட்டாலும் அதை தக்க வைத்துக்கொள்வதே சிறப்பானது. அப்போது நம்மிடம் தங்க வேண்டியது நல்ல சிந்தனையே!
அதை விடுத்து இறுமாப்பும், அகங்காரமும், தலைதூக்கிவிடாமல் பாா்த்துக்கொள்வது நமக்கு நல்லது. அப்போது நம்மிடம் சிறந்த குணங்கள் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல அதை நிா்வகிக்கும் தன்மையும் நம்மிடம் இருப்பதும் நல்லதே!
கடின உழைப்பு இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். அதாவது ஒரு காாியத்தில் நாம் இறங்கும்போது ஒரு சதவிகிதம் ஊக்கமும், தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் வியர்வையும் கொன்டதே நமது திறமைக்கான ஊன்றுகோல். அதேபோல நமது குறிக்கோள் அடுத்தவரை முந்திச்செல்ல வேண்டும் என்பதை விட நம்மை நாமே முந்திக்கொள்வதாக அமையவேண்டும்.
அந்த வாய்ப்பை, சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்துவதே வெற்றிக்கான வழி.
அதை விடுத்து வேலைகளை தள்ளிப்போடுவது, நாளை பாா்த்துக்கொள்ளலாம் என அலடசியமாக செயல்பட்டால் வெற்றிக்கானபாதை மூடப்படுவதோடு முயல் ஆமை கதையாக மாறி விடக்கூடும்.
ஆக, தெளிவான சிந்தனை மற்றும் வெற்றியை நோக்கிய இலக்குடன் கூடிய பயணமே நமக்கு நல்ல பலனைத்தரும்.
எனவே தவனை முறையில் வரும் வெற்றியை அதிமாக்கவும் தவணை முறையில் வரும் தோல்வியின் தவணையைக் குறைக்கவும், நம்கையில் இருக்கும் லட்சியம், நம்பிக்கை, உழைப்பு, இவைகளே மூலாதாரமாகும். ஆக வெற்றிகண்டு ஆணவம் கொள்வதும், தோல்வி கண்டு துவள்வதும் நமக்கு பலமான எதிாிகளே.
எதிரிகளை எதிா்கொள்ளுங்கள் அவைகளை உரம் போட்டு வளா்த்துவிடாதீா்கள்!