

பொதுவாகவே மனித மனங்களில் மனதும், எண்ணமும் தூய்மையானதாக இருப்பதே எல்லா வகையிலும் சிறந்ததாகும். கெடுமதி எண்ணங்கள் நம்மிடம் வாடகையின்றி குடியேறிவிடுகிறது. அப்போது நமது மதிப்பும் மரியாதையும் குறைந்து போவது உறுதியான ஒன்றே.
ஏன் நமது எண்ணம் இவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது என்பதை நாம் சிந்தித்துப்பாா்க்கவேண்டும். அதை வளரவிடுவதால் நமக்கு பல வகையிலும் சிரமங்கள் வந்து போகுமே! நமக்கே இந்த விஷயங்கள் தொிந்தாலும் நாம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதே சாலச்சிறந்ததாகும்.
தொடக்கத்திலேயே நாம் அதனை விட்டு விலகுவதே நல்லது. சிறியதாக ஆரம்பிக்கும் மழையானது ஆரம்பத்தில் ரசிக்கப்படும், அதுவே தொடர்ந்து பெய்ய ஆரம்பித்தால் வெறுக்கப்படுவது போலவே அமையும். அதே போலத்தான் புாிந்து கொள்ளக்கூடிய அன்பும் அப்படித்தான். இதுபோலவே நமது நல்ல எண்ணங்களும் பிறரால் மதிக்கப்படும்.
அதே நேரம் நமது மனதிற்குள் இருக்கின்ற ஆசை எனும் நிலைபாட்டிலும் கெடுமதியான எண்ண ஓட்டத்தால் தவறான வழியில் பொருள் ஈட்டுதல் கூடவே கூடாது. நமது மனதும் தவறான பாதையில் போய் பொய்யும், ஆசையும், கூட்டணி போட்டுவிட்டால் அவ்வளவுதான் ஆண்டவன் போடும் கணக்கிலிருந்து தப்பிக்கவே இயலாது.
நமது ஒவ்வொரு அசைவும் நமக்கோ நமது எதிா் தரப்பினர்களுக்கோ தொியாமல் போகலாம். ஆனால் அனைத்தும் நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு தொியாமல் போகாது!
ஆக, அதிக ஆசையை ஒழித்து அன்பை பெருக்கி அனைவருக்கும் நல்லவராய் வாழ்வதே சிறப்பானதாகும்.
ஆசை என்பது ஓட்டை விழுந்த மண்குடம் போன்றது, அதில் ஒரு போதும் தண்ணீா் நிரம்பாது, நிரப்பவும் முடியாது. அதேபோல அன்பு என்பது விதைபோல, அதை பூமியில் புதைத்து தண்ணீா் ஊற்றினால்தான் முளைக்கும்.
எனவே அனைவரிடமும் நல்ல எண்ணங்களுடன் பழகுவதோடு, புாிதலோடு கூடிய வாழ்நாள் எனும் தோ்தனை லாவகமாக நகர்த்த வேண்டும். புாியாத வாழ்வு பிரிதலில்தான் முடியும், சரியான புாிதல்இருந்தால் கோபம்கூட அர்த்தமுள்ளதாக தொியும். புாிதல் இல்லையென்றால் அன்பு கூட அர்த்தமற்றதாகிவிடுமே!
நல்ல எண்ணம் கடைபிடித்து மனசாட்சிக்குப்பயந்து அன்பைக்காட்டி சரியான புாிதலோடு வாழ்க்கைப் படகை ஓட்டினாலே வெகு நோ்த்தியாய் அடுத்த கட்டத்திற்கு போகலாம்.
அதுசமயம் எவ்வளவு எதிா்மறைகள் குறுக்கே தடுத்தாலும் நமதுவாழ்வு எனும் படகுப்பயணத்தை ஆழமான பகுதியில் கூட எளிதாக பயணிக்கலாமே!