வார்த்தைகளை உபயோகிக்கப் பழகிக்கொள்ளுங்கள்!

Get used to using words!
Lifestyle articles
Published on

ம் எண்ணங்களே நமது வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்யும். நேர்மறை (positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு, நாம் ஆக்கபூர்வமான செயல்களை செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன. வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பதுபோல இருந்தது இல்லை.

எதிர்மறை (negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டு இருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம்போல நமக்குத் தோன்றும். அவை நமக்குக் கொடுப்பது வலியும் வேதனையும்தான்.

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஒழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக துயருற்று அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக்கொண்டிருந்தார்.

சென்ற ஆண்டு எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை, கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. அதே ஆண்டு அறுபது வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து ஒய்வு.

அதே ஆண்டு என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே ஆண்டு என் மகன் ஒரு வாகன விபத்தில் மாட்டிக்கொண்டு மருத்துவத் தேர்வு எழுத முடியவில்லை. வாகனமும் பெரும் சேதாரம். என்ன ஒரு மோசமான ஆண்டு, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.

இதையும் படியுங்கள்:
விடியல் பறவைகளாக இருங்கள்!
Get used to using words!

அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் வருத்தத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டு பின்னால் இருந்து அவர் எழுதியதை வாசித்தார். பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு தாளில் எதையோ எழுதிக்கொண்டு வந்து, கணவர் எழுதிய தாளிற்கு அருகில் வைத்தார்.

சென்ற ஆண்டு நீண்ட நாட்களாக இருந்த வலியில் இருந்து விடுதலை பெற்றேன். அறுபது வயது ஆனதால் வேலையிலிருந்து ஒய்வு பெற்றதால், என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுகிறேன்.

என் தந்தை தொண்ணுற்று ஐந்து வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இயற்கை எய்தினார். அதே ஆண்டு என் மகன் விபத்தில் மீண்டு புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய வாகனம் சேதாரமானாலும் என் மகன் எந்தக் குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான். இந்த ஆண்டு எனக்கு நல்ல ஆண்டு என எழுதப்பட்டிருந்தது. அவர் மனைவி எழுதியதைப் படித்த கணவர், நன்றிப் பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.

என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக்கொள்வது நமது கையில்தான் உள்ளது. நேர்மறை எண்ணங்கள் நமது உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும் திறன் பெற்றவை.

நேர்மறையான வார்த்தைகளை உபயோகிக்கப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வாழலாம்.

நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம். அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com