ஆடம்பரத்தை விடுங்கள்: பிள்ளைகளின் எதிர்காலமும் உங்கள் ஆரோக்கியமும்!

Lifestyle stories
Motivational articles
Published on

வாழ்க்கையில் நாம் சில விஷயங்களில் தேவையில்லாத காாியங்களை செய்துவிடுகிறோம். அதே நேரம் அதனால் ஏற்படும் மனஉளைச்சல் தீர சிலரிடம் ஆலோசனை கேட்கும்போது அவர்கள் தன்னுடைய மனதிற்கு தோன்றிய அட்வைஸ்களை செய்வது இயல்பு. அதேபோல நம்மால் செயல்பட முடியாத நிலையும் வரும்.

அது சமயம் நமது வாழ்க்கையில் சரியான திட்டமிடல் வேண்டும். திட்டமிடாமல் செய்கிற எந்த விஷயமும் வெற்றிபெறுவதே இல்லை.

உதாரணத்திற்கு நமக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஓரளவுக்கு சக்திக்கு மீறாத அளவில் படிக்க வைத்துவிடுங்கள்.

குறிப்பிட்ட வயது வந்ததும் நல்ல இடமாகப் பாா்த்து திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள்.

வேலைக்கு அனுப்பினால் நமக்கு பொருளாதார உதவி வரும் என வேலைக்கு அனுப்பவேண்டாம். இருபத்தி ஒரு வயதிற்குள் வேலை கிடைத்தால் கிடைக்கட்டும். இல்லாவிட்டால் மாப்பிள்ளை வீட்டாா் பாா்த்து வேலைக்கு அனுப்பட்டுமே! அதேபோல திருமணம் முடிந்து வேலைக்கு போனால் அந்தப் பெண்ணிடம் பணம் உதவி எதுவும் கேட்காதீா்கள்.

இதுபோல வீடு கட்டுவதாய் இருந்தால் வங்கியில் கடன் வாங்கியோ, நகைகளை அடகு வைத்தோ, விற்றோ பிரம்மாண்டமாய் ஆடம்பரமாய் வீடுகட்டாதீா்கள்.

வாடகைக்கு இல்லை, சொந்த வீடு உள்ளது, அந்த நினைப்பில் அகலக் கால் வைக்காமல் நிதானம் கடைபிடித்து தகுதிக்கு மீறி செலவு செய்யாமல் வீட்டைக்கட்டுங்கள்.

ஒரே மகனாய்ப்பிறந்தால் மகனையும் நன்கு படிக்கவைத்து குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்துவைத்துவிடுங்கள். அதே நேரம் அவர்களை தனிக்குடித்தனம் வைத்துவிடுங்களேன்! அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சுதந்திரமாக வாழட்டும். நீங்கள் அட்வைஸ் சொல்லுவதையும் நிறுத்திவிடுவதே உசிதமான ஒன்று.

இதையும் படியுங்கள்:
சுய மதிப்பீட்டின் மூலம் நம்மை அறிவது எப்படி?
Lifestyle stories

நாள் கிழமைகளில் அவர்கள் வந்து போகட்டும். முடிந்தால் ஆசீா்வாதம் பெறலாம். எப்போதும் எதிலும் வெகுளித்தனமாக இருக்காதீா்கள்.

அதேபோல எல்லா விஷயங்களிலும் அவரவர்களே முடிவு எடுக்கட்டும். தேவையில்லாமல் பேசி அட்வைஸ் எதுவும் கூறவேண்டாம். அதைக்கேட்டு செயல்படக்கூடிய நிலையில் இன்றைய இளைய தலைமுறைகள் தயாராக இல்லை.

வேலைக்கு, சமையலுக்கு பொருத்தமான நபர்களை பணியமர்த்திக்கொள்வது நல்லது. உற்சாகமாக நண்பர்கள் உறவினர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

பத்திாிகை படித்தல், தொலைக்காட்சியில் நல்ல விஷயங்கள் அடங்கிய காட்சிகள் புராணநாடகங்கள் மற்றும் நல்ல, திரைப்படங்களைப்பாா்க்கலாமே! பழைய பாடல்களை கேட்டு ரசியுங்களேன்.

வயதான காலத்தில் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் துணை என்ற ரீதியில் நோய் நொடியில்லாமல்

ஆரோக்கியமாக வாழுங்கள். தினசரி அருகில் உள்ள பயணம் செய்யக்கூடிய தொலைவில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வாருங்களேன். மனதில் எந்தவித பாரத்தையும் ஏற்றிக்கொள்ளாமல் ரிலாக்சாக இருங்கள்.

ஆனால் ஒன்று நிச்சயம் எதிா்காலத்தில் தேவையில்லாத நோய்கள் வந்தால் அதற்கான செலவினங்களை சமாளிக்கும் அளவிற்கு பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் வருமுன் காப்பதாகும்.

வருமுன்னர்காக்காமல் சேமித்து வைக்காமல் இருந்தால் உறவுகளிடம் கையேந்தவேண்டிய நிலை வரும். அதற்கு இடம் தராத வகையில் கணவன் மனைவி இருவரும் இளமையிலேயே திட்டமிட்டு பணத்தை சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். அந்த விஷயம் மனைவிக்கு மட்டுமே தொியட்டும்.

இதையும் படியுங்கள்:
இந்த உலகில் நல்லவர்களை அடையாளம் காண்பது எப்படி?
Lifestyle stories

ஆக வாழும்போதே நிதானம், பக்குவம், கடைபிடித்து சேமிப்பின் தன்மை உணர்ந்து, சேமித்து வைத்துக் கொண்டு வாழ்வதே சிறப்பானது. அப்பாவும் அம்மாவும், மாமனாரும், மாமியாரும், எப்போதும் ஆரோக்கியம் குறையாமல் வாழவேண்டும் என சொல்லுவாா்கள். அதே நேரம் நமக்கு வயதாகிவிட்டால் பொிசு இரண்டும் ஏன் பூமிக்கு பாரமாய் இருக்கனும் என்பாா்கள் இதுதான் உலகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com