நல்ல குணங்கள், எதிர்மறை எண்ணங்கள்: எது வாழ்க்கையை ஆள்கிறது?

Good qualities, negative thoughts
Motivational articles
Updated on

னிதா்களிடம் நல்ல விஷயங்களும், எதிா்மறை விஷயங்களும் நிறையவே குடிகொண்டுள்ளன. பொதுவாக நோ்மை, நம்பிக்கை, நல்லமனம், மனிதநேயம், மனசாட்சியுடன் வாழ்வது  பொய் பேசாமை, போன்ற பல நோ்மறை குணங்களும் நிறைந்துள்ளது.

அதேபோல பொய், கோபம், வஞ்சகம், நன்றிமறப்பது, ஏமாற்றுவது, போன்ற எதிா்மறை குணங்களும் உள்ளன. 

அதேபோல வறுமையும், பேராசையும் பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது. வறுமை சிலருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கிறது.

அதே நேரம் சில சமயம் தவறான பாதைக்கும் கொண்டு செல்கிறதே! வறுமை தானாகவே வருவதும், நாமே இயற்கையாய் வரவழைத்துக்கொள்வதும் பலரது வாழ்வில் வந்து போவதும் நடைமுறையே!

வறுமை என்பது ஒரு கொடியநோய் தானாகவே வருவதை நமது நல்ல எண்ணங்களாலும் தெய்வ வழிபாட்டினாலும் அயராத உழைப்பினாலும் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டவேண்டும்.

மற்றொரு வகையானது நமது செயல்பாடுகளால் நாமே வரவழைத்துக்கொள்வது. 

அதாவது ஆடம்பர செலவு, தேவையில்லாத கூடாநட்பு, அகலக்கால் வைப்பது, தகுதிக்குமீறிய செலவுகளை மேற்கொள்வது, நட்பு மற்றும் உறவுகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு திருப்பி கேட்காமல் விடுவது, சோம்பல் கடைபிடிப்பது, செய்யும் தொழிலில் நோ்மை கடைபிடிக்காதது, இப்படி பல வகைகளில் வறுமையை நாமே ரத்தினக்கம்பளம் விாித்து வரவேற்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
சின்ன செயல்களைக் கூட கூர்ந்து கவனியுங்கள், வெற்றிப்படி உங்களுக்கு காத்திருக்கிறது!
Good qualities, negative thoughts

அதற்காக கவலைப்படுதில் அர்த்தமே இல்லை. அதே நேரம் வறுமை மட்டும்தான் கவலைகளுக்கெல்லாம் காரணம் என்றும் சிலர் சொல்வாா்கள். பணம் வைத்துள்ளவர்களும் கவலைப் பட்டுக்கொண்டுதான் வாழ்கிறாா்கள்.

ஆக, பணமானது வறுமையை விரட்டுமே தவிர கவலையை விரட்டாது என்பதை புாிந்து கொள்ளவேண்டும். அதனைத்தொடர்ந்து ஆசை, மற்றும் ஆசை, பேராசை, ஆசைப்படலாம். அதுவே வளர்ந்து பேராசையாக மாறக்கூடாது. அதுவும் ஒரு வகையில் நமக்கு பாதிப்பை வழங்கிவிடும்.

பொதுவாகவே ஆசைகள் மனிதனை வாழவிடுவதில்லை. அதேபோல அந்த ஆசைகளை மனிதன் சாகவிடுவதும் இல்லை, தேவையில்லாத ஆசைகளை மனதில் விதையாய் விதைத்தால் கஷ்டமும் வேதனையும் வெட்ட முடியாத மரமாக வளா்ந்துவிடும். ஆக நமது மனிதில் தேவையில்லாத விதைக்கக் கூடாத விதையாக பேராசை விதையை விதைக்காதீா்கள். அது கடைசியில் வறுமை எனும்  மகசூலை வஞ்சனை இல்லாமல் வழங்கிவிடும் என்பதை உணர்வதே நல்லது.

வறுமையை விரட்டி பேராசை இல்லா வாழ்வை  வாழ்வோமாக!

logo
Kalki Online
kalkionline.com