
வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. அதை எதிா்கொள்ள நம்மிடம் பல்வேறு யுக்திகள் இருந்தாலும், அதை நாம்சரிவர கையாளவேண்டும். அதற்கு எத்தனையோ உபாயங்கள் இருந்தாலும், சில தேவையில்லாத அனுகுமுறைகளை நாம் கையாளாததும், அதே நேரம் சிலவற்றை கையாள்வதிலும் மட்டுமே உள்ளது.
பலவகை அணுகுமுறைகள் இருந்தாலும், அதை நாம் சரியாக பயன்படுத்தாமல் இருப்பது நமது வெற்றியை பாதிக்கும் .
சில அணுகுமுறைகளை நாம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் நமக்கே ஆபத்துதான். அதுவகையில் நமது முதல் எதிாி யாா் தொியுமா நம்மிடம் குடியிருந்து வரும் தாழ்வு மனப்பான்மைதான் (Inferiority Complex) இந்த தாழ்வு மனப்பான்மையானது நமது முன்னேற்றத்தைத்தடுக்கும் அதோடல்லாமல் பள்ளிப்பருவத்திலேயே நம்முடன் தொடா்ந்து வரும்.
அதாவது பொதுவாக நமக்குள் ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையானது, நமது செயல்களை வெகுவாக பாதிக்கும்.
உதாரணமாக பள்ளியில் ஆசிாியர் பாடத்தில் கேள்விகேட்பாா், அது நமக்கு அரைகுறையாக தெரிந்திருக்கலாம், சொல்லலாமா வேண்டாமா, ஒருக்கால் தப்பாக இருந்து ஆசிாியர் நம்மை திட்டுவாரோ, அதை மற்ற மாணவர்கள், மாணவிகள் கிண்டல் செய்து விடுவாா்களோ! என்ற உள்மனதின் தாக்கமேதான் தாழ்வு மண்னப்பாமை, என்பதாகும்.
இந்த நிலை தொடரக்கூடாது. இது வளா்வது எந்த தருணத்திலும் நமக்கு பாதிப்பையே தந்துவிடும். நாம் எதையும் சாதிக்கமுடியும் என்று மேடையில் முழங்குவாா்கள். அதைக்கேட்டு நாம் கைதட்டுவோம். சினிமாவில் சாமர்த்தியமாய் சில மகளிா் கதாபாத்திரங்கள் மனதில் உறுதிபட பேசுவாா்கள். அவற்றை பாா்த்து ரசித்து நாம் கைதட்டுவோம். ஆனால் நமக்குள் உலாவரும் தாழ்வு மனப்பான்மையைக் கைவிடுவதே சிறந்தது.
அதேபோல அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போா்களிடம் நமது தாழ்வு மனப்பான்மையைக் காட்டக்கூடாது. ஆக, நாம் பணிபுாியும் இடங்களில் கூட மேலதிகாாிகளிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லவிடாமல் தடுக்கும் தாழ்வு மனப்பான்மையானது அலுவலகத்தில் நமக்கான மரியாதையை கெடுத்துவிடுமே!
இதுபோலவே நமது வாாிசுக்கு திருமணம் ஏற்பாடு செய்யும் நிலையில் சம்மந்தி வீட்டாாிடம் தாழ்வு மனப்பான்மை விட்டு ஒழித்து இயல்பாய் பழகுவதே நல்லது. அதனைத்தொடந்து நம்மிடம் சுப்பீாியாாிட்டி காம்ப்ளக்ஸ் இருப்பதும் நல்ல ஆரோக்கியமான விஷயமே அல்ல.
அந்த மனப்பான்மையானது பல விஷயங்களில் நமக்கான மரியாதையை கெடுத்து வீணடித்துவிடும் என்பதே வரலாறு. ஆக நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை விட்டு இறைவன் தந்த நல்வழியில் நோ்மறை எண்ணங்களைக் கடைபிடித்தே வாழ்வோம்.