
பிறவியில் அமைந்த நம் முகத்தையோ உடல் தோற்றத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நமக்கே நமக்காக சில தனித்துவமான குணங்கள் உண்டு. நம் பலவீனங்களைப் பெரிதுப்படுத்தாமல், திறமைகளை வளர்த்துக் கொள்வதே அழகு.
திறமை என்பது நீரில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது. கொஞ்சம்தான் வெளியில் தெரியும். மீதித் திறமையை நாம்தான் வெளியில் கொண்டு வரவேண்டும்.
தோற்றத்தில் ஸ்மார்ட் ஆகுங்கள்
எப்போதும் ஏதோ ஒரு கவலை, மனக்குறை. அதனால் ஏற்படும் வருத்தம் என்று இருந்தால் முகமும் பொலிவாக இருக்காது. காரணம் திருப்தியின்மையால், முகத்தில் சோர்வு, வாட்டம், மனநிறைவு இல்லாத நபர்களை ஸ்மார்ட் என்று சொல்லவே மாட்டார்கள். மனதையும், முகத்தையும் உற்சாகமாக மாற்றுங்கள்.
சிரித்த முகத்துடன் தெளிவாக தோற்றம் கொடுங்கள். எளிதில் அனைவரும் நண்பர்களாக கிடைப்பார்கள்.
பழக்கத்தில். ஸ்மார்ட் ஆகுங்கள்
சிலர் அதிகமாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ பேசுவார்கள். கோபத்தை சத்தமாகவோ வெளிப்படுத்துவார்கள். இதெல்லாம் மற்றவர்களையோ விலக வைத்துவிடும். அமைதியாகப்பழகினால்தான் நீங்கள் கவனிப்படுவீர்கள். அடுத்தவர்களுடன் பழகும்போது ஏற்றத்தையும் குழப்பத்தையும் வெளிப்படுத்தக்கூடாது. இனிய பாவனைகள் காட்டுவதும், பணிவாக நடப்பதும் நம் மதிப்பை உயர்த்தும்.
ஒப்பனை, ஆடையில் ஸ்மார்ட் ஆகுங்கள்
உங்களுக்கு பிடித்த உடையை அல்ல, உங்களுக்கு நல்ல தோற்றம் தரும் உடைகளையே உடுத்துங்கள். உங்கள் தோற்றம், வயது ஆகியவற்றை மனதில் கொண்டு, ஆடை அணிகலன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 50 வயதில் டீன் ஏஜ் தோற்றத்துக்கு ஆசைப்படக்கூடாது. ஒவ்வொரு பருவத்திற்கும் அதற்கான அழகுகள் உண்டு. அப்படி காட்சி தருவதே ஸ்மார்ட். அதிக ஒப்பனை இல்லாமல் இருந்தாலும் எளிமையே அழகுதான்.
பேச்சில் ஸ்மார்ட் ஆகுங்கள்
சிலரிடம் பேசும்போது அதிகமாக புலம்பும்புவார்கள். இன்னும் சிலர் வாயைத் திறந்தால் மூடவே மாட்டார்கள். சிலர் எப்போதும் மற்றவரை குறை கூறிப்பேசுவார்கள். இந்தக் குணங்கள் ஒருவரை ஸ்மார்ட் ஆக்காது. இதற்காக பேசாமல் இருக்க வேண்டாம். அளவாகப் பேசுங்கள். அர்த்தமுள்ளதாகப்பேசுங்கள். அதற்காக உங்கள் புலமை முழுவதையும் கொட்டித் தீர்க்காதீர்கள். எதற்கெடுத்தாலும் வாதாடாமல், வெல்ல வேண்டியது மனிதர்களைத்தான். வாதங்களை அல்ல.
இதையெல்லாம் செய்ய ஆரம்பித்தால் அப்புறம் உங்களைப் பார்த்து எல்லோரும் சொல்வார்கள். 'ஆஹா இவர் எவ்வளவு ஸ்மார்ட் 'என்று சொல்வார்களே' மற்றவர்களுடன் பழகும் விதம், பேசும் விதம். உடை அணியும் நேர்த்தி என்று பல விஷயங்களும் 'ஸ்மார்ட் என்பதன் அடிப்படைகள்.
ஸ்மார்ட்டாக இருங்கள்… ஸ்மார்ட்டாக ஆகுங்கள்.