
கொலம்பஸ் என்பவர் சாதாரண கப்பல் மாலுமியாகத் தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,
ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து சின்னஞ்சிறிய கப்பலில் கொலம்பஸ் கடற்பயணம் மேற்கொண்டார்.
பசிபிக் பெருங்கடலில் அவரது பயணம் இன்னும் சில மாலுமிகளோடு தொடங்கியது. பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யும்போது கரை எதுவும் தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட நாட்கள் கடலில் தொடர்ந்து பயணம் செய்ததால் அவர்களுக்கு வேண்டிய உணவும், குடிப்பதற்கான தண்ணீரும் இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உருவானது.
இன்னும் பயணம் செய்தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற பயம் பலரை தொற்றிக்கொண்டது. "திரும்பிச் சென்றுவிடலாம்" என்று கப்பலிலுள்ள பலரும் நினைத்தார்கள். "திரும்பி நாட்டுக்குச் சென்றுவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.
மேலும், சில நாட்கள் அவர்களது பயணம் தொடர்ந்தது. இன்னும் பயணம் செய்தால் திரும்பிச் செல்லும்வரை உணவு போதாது என்பதால் அவர்கள் தங்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி திரும்பிச்செல்ல முடிவெடுத்தார்கள். ஆனால், கொலம்பஸ் அதனை எதிர்த்தார்.
நாம் உலகத்தை சுற்றிப் பார்த்து புதியவற்றைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டோம். ஆனால், உணவு இல்லாததாலும், குடிதண்ணீர் இல்லாததாலும் வந்த வழியே திரும்பிச்செய்வது என்பது வெற்றிக்கு வழிவகுக்காது" என்று சொல்லி மற்றவர்களின் கருத்தை, எதிர்த்தார் கொலம்பஸ்.
கொள்கைப் பிடிப்போடு தீவிரமாக தனது கருத்தை வலியுறுத்திய கொலம்பஸ்சை எதிர்க்க வழிதெரியாமல் உடனிருந்த மாலுமிகள் தவித்தார்கள்.
இன்னும் ஒரே ஒருநாள் மட்டும் நாம் முன்னோக்கி பயணம் செல்வோம். அதற்குள் கரை எதுவும் தெரியாவிட்டால் நாம் திரும்பி நம் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வோம். அதுவரை எனக்கு உணவும், தண்ணீரும் வேண்டாம் என பிடிவாதமாக சொன்னார் கொலம்பஸ்.
கொலம்பஸின் கோரிக்கையை ஏற்று கப்பலை முன்னோக்கிச் செலுத்தினார்கள். சுமார் 20 மணி நேரம் முடிவதற்குள் புதிய கண்டமான அமெரிக்கா கண்டத்தை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
"தாங்கள் எடுத்த முயற்சியில் தோற்றுவிடுவோம்" என்ற நிலை வந்தபோதுகூட, தயங்காமல் தைரியமாக முடிவெடுத்தார் கொலம்பஸ். தன்னோடு இருந்த மாலுமிகள் அனைவரும் 'எதிர்க்குரல்' எழுப்பிய பின்பும், தனது வெற்றிச் சிந்தனையை நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்திருந்தார் கொலம்பஸ். இந்த கொள்கைப் பிடிப்புதான், "அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ்" என்று அனைவரும் இன்றும் நினைவுகூறும் வகையில் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது.
வெற்றியை நோக்கி பயணம் செய்யும்போது ஏராளமான தடைகளும், எதிர்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் தடைக்கல்லை எல்லாம் படிக்கல்லாக மாற்றும் அளவுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்தால், வாழ்க்கையில் வெற்றிகள் பெற முடியும்.
வெற்றி பயணத்தை தொடரும்போது தோல்விகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இரவுக்கு இன்னொரு பக்கம் பகல் இருப்பதுபோல, உறவுக்கு இன்னொரு பக்கம் பிரிவு இருப்பதுபோல, இன்பத்திற்கு இன்னொரு பக்கம் துன்பம் இருப்பதுபோல வெற்றியின் மறுபக்கம் வேதனைகளாலும், ஏமாற்றங்களாலும், தோல்விகளாலும் நிரப்பப்படலாம். இருந்தபோதும், வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக எண்ணிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற பழகிக்கொள்வது இன்றைய சூழலில் தேவையான ஒன்றாகும்.