
இறைவன் படைப்பில்தான் மனிதர்களிடம் எத்தனை விதமான குணநலன்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு மனோபாவம், பேச்சு, பழக்க வழக்கம், செயல்பாடுகளில் பலவித வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
பல இடங்களில் மனித மனங்களில் விசாலம் குறைந்துவிட்டது. சுயநலம் அதிகமாக இடம் பிடித்துவிட்டதால், மனித மனங்களில் அழுத்தம், இறுக்கம் தலைதூக்கி வருவது நல்லதல்ல.
அது ஆரோக்கியமானதாகவும் தொியவில்லை. இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி என ஒருபாடல் வரும், அதுபோலவே சந்தோஷத்தை சங்கடமில்லாமல் வரவேற்கும் மனித மனம் சங்கடத்தையும் எதிா்கொள்ள வேண்டுமே! மனித மனங்களில் மனஇறுக்கம் தவிா்க்கப்படவேண்டும்.
அது கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு எதிா்மறை நிகழ்வுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாகவே மன அழுத்தங்களைப்போக்க ஒரு போதும் தனிமையைத் தேடாதீா்கள். பிடித்தவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அல்லது பிடித்த எதையாவது செய்யுங்கள், அதுவே மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சில தருணங்களில் மெளனமாக இருப்பதும் ஆபத்துதான். எதுவுமே பேசாமல் பதில்கூறாமல் அழுத்தமாக இருக்கிறாா்கள் என புாியாதவர்கள் குதர்க்கம் பேசுவதும் நடைமுறையே. எந்த நிலையிலும் நம்மிடம் உள்ள சந்தோஷத்தை மனமெனும் உண்டியலில் சேமித்து வைக்காதீா்கள். அந்த சந்தோஷத்தை பிறரிடம் பகிா்ந்துகொள்ளுங்கள்.
அதுவே உங்களிடம் உள்ள மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமே! எப்போதும் குறைகளையே பிறரிடம் சொல்லாதீா்கள். அதுவே நாம் கடைபிடிக்க வேண்டிய பொிய விஷயமாகும். அதேபோல எதையும் பாா்க்கும் கோணங்களில் பிழை என நமக்கு தோன்றலாம் அது பிழையல்ல, நமது ஆழமான மனதின் மிகையான பிழை.
அப்படி நாம் பாா்க்கும், பழகும் அனைத்தும் கோணலாகத் தொியும் நிலைக்கு நமது மனது அலைபாய்வது நல்லதல்ல. பொதுவாகவே நாம் செய்யும் தவறுகளை நாமாக உணர்ந்திடல் வேண்டும். அநேகமாக தவறை உணர்ந்தவர்களே மனசாட்சி உள்ளவர்களாக கருதப்படுவாா்கள்.
இப்படி மன அழுத்தம் நகைச்சுவையை ஒதுக்கிவைத்தல், விசாலம் தொலைத்தல், தவறுகளை தானாகவே திருத்திக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை கையாள்வது நல்லதே, மொத்தத்தில் வாழும் வரையில் நோ்மறை சிந்தனையோடு வாழ்வதே நல்ல தாகும்.