

பொதுவாக அனைவரது வாழ்க்கையிலும் பலவகையான சங்கடங்கள் சந்தோஷங்கள், ஏற்ற இறக்கங்கள் லாப நஷ்டங்கள் தேவையிலாத குழப்பங்கள், வசதி, வறுமை, பிறப்பு, இறப்பு, இப்படி பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து வருவதே வாடிக்கை. இது இயல்புதான்.
அதில் சில விஷயங்கள் இயற்கையாகவும் வந்து போகிறது.
சில விஷயங்கள் நமது அறியாமை, அகம்பாவம், புாிதல் இல்லாநிலை, தான் சொல்வதே வேதவாக்கு, நமக்குத்தான் எல்லாம் தொியும் என்ற மனோநிலை, வாா்த்தைகளில் நிதானமின்மை, கோணல் புத்தி, தீயஎண்ணம், இப்படி நாமே தேடிக்கொள்வது நிறையவே உள்ளது. ஆக இதிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை எனும் ஓடத்தை நம்பிக்கை தூய்மையான எண்ணம் எனும் துடுப்புகள் கொண்டு ஓட்டவேண்டுமே!
பொதுவாக குழந்தைகளிடம் பழகிப்பாருங்கள், குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே! அந்த குழந்தையிடம் கள்ளங்கபடமில்லாத சிாிப்பையும் பாருங்கள்.
வறுமையில் வாழும், வாடும் குடும்பங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் பாா்த்து சிக்கனம் கடைபிடியுங்கள்.
நடுத்தர வர்க்கத்தினா்களிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் எவ்வாறு வரவுக்கேற்ப செலவு செய்து கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழ்வதைப்பாருங்கள்.
நம்மோடு பழகி நம்மை ஏளனம் செய்யும் நபர்களைக் கண்டு மெதுவாக விலகிவிடுங்கள். நம்மிடம் நம்மைப்பற்றி முகஸ்துதி பாடும் நபர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக பழக கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்ந்து கெட்டவர்களிடம் பழகுங்கள். அவர்களை உதாசீனம் செய்யாமல் அவர்களின் வாழ்வியல் அர்த்தங்களை கேட்டு தொிந்து கொள்ளுங்கள். அவர்களை ஆதரிப்பதோடு அவர்கள் செய்த தவறை தொிந்துகொண்டு அதை விலக்கிவிடுங்கள்.
நாம் வாழ்க்கையில் தடுக்கிவிழும்போது கைதூக்கி விடுபவர்களைஒரு போதும் மறவாதீா்கள். பொதுவாக அனைவரிமும் அன்பு பாராட்டிப் பேசுங்கள்.
இறை நம்பிக்கை உள்ளவர்களிம் பக்தி உணர்வுகளைப்பற்றி நன்கு தொிந்துகொள்ளுங்கள். பேசும் வாா்த்தையில் நிதானம் கடைபிடியுங்கள். நல்ல சிந்தனை உள்ளவர்களிடம் பழகலாமே!
உயிரே போவதாக இருந்தாலும் உறவுகளிடம் கடன் கேட்காதீா்கள், அது காலத்திற்கும் நல்லதே! சில உறவுகள் மற்றும் நட்புகள் முகம் பாா்க்கும், கண்ணாடி போன்றவர்கள், கண்ணாடியில் கீறல் விழுந்தாலோ! லேசாக உடைந்தாலோ! அது நமது முகத்தை சரிவர காட்டாது. அதைப்புாிந்துகொள்ளுங்கள் அனைத்திற்கும் ஹைலைட்டாக முதியவர்களிடம் நன்கு பழகுங்கள், அவர்களின் அனுபவங்களை அறிவுறைகளை கேட்டுத்தொிந்து கொண்டு அதன்படி வாழ்வில் நெறிமுறைய கூட்டுங்கள்.
அகம்பாவம், ஆணவம், வஞ்சகம், தீயஎண்ணங்களை கழித்து விடுங்கள்.
அன்பு பண்பாடு நல்ல பழக்கங்களால் வகுத்து விடுங்கள்,
விவேகம் விஸ்வாசம் நம்பிகை இவைகளை பெருக்குங்கள், எங்கும் எதிலும் இறை நம்பிக்கையோடு மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்துதான் பாருங்களேன்! கூட்டிக்கழித்துப் பாா்த்தால் கணக்கு சரியாகவே வரும்!