முடியும் என்றால் முடியும்..!

If you can, you can..!
self confident
Published on

பெரும்பாலான  சாதனையாளர்களின் தாரக மந்திரமாக இருக்கும் உத்வேகம்  அளிக்கும் வாக்கியம் 'முடியும் என்றால் முடியும்' என்பதாகும்.

அடையவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக்கொண்டு, செயல்பட துவங்குபவர்கள் தொய்வு ஏற்பட்டாலும் தளர்ச்சி அடையாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள்.

எதிர்நோக்கி செல்லும்பொழுது சந்திக்க வேண்டிய இடர்களை சந்தித்து  முக்கியமான செயல்களுக்கு  உரிய முக்கியத்துவம்          (prioritize) அளித்து, தேவை இல்லாதாவற்றை கண்டும் காணாமல் ஒதுக்கி (ignore unwanted things) எடுத்துக்கொண்ட செயலில் ஈடுபட்டு  (கருமமே கண்ணாக இருந்து) முன்னேறி செல்வதில் தனி சூரர்களாக. இருக்கிறார்கள்.

குறிப்பாக முன்னேறும் பாதையில் வரும் குறிக்கீடுகள், பிறர் குறை  கூறும் விமர்சனங்கள் இவைகளின் மீது கவனம் செலுத்தாமல் தங்கள் இலக்கை அடைய தேவையான சிந்தனைகள், செயல்பாடுகளில் முழுமையாக  ஈடுபடுவதால் எந்த வகை மற்றும் யார் குறை கூறினாலும்  இத்தகைய சாதனை செய்ய முற்படுவோருக்கு எந்த வகையிலும் தடங்கலாக  இருக்காது.

கவனம் சிதராமல் இருப்பதில் இவர்கள் கில்லாடிகள். அப்படிபட்ட குணத்தை (developing concentration power quality,  despite any kind of attractions / distractions) வளர்த்துக் கொள்வதினால்தான்  இத்தகைய வகை  நபர்களால்  'முடியும் என்றால் முடியும்'  என்பதை திடமாக நம்புவது மட்டும் அல்லாமல் செயல்படவும் முடிகின்றது.

நேரம் போனால் திரும்ப வராதது என்பதை நன்றாக அறிந்த இவர்கள் நேரம் வீணாக்குவதற்கு எதிரிகளாாக இருப்பார்கள். நேரத்தை எப்படி அதிகப்படியாக உபயோகிக்க முடியும் என்ற முயற்சியை கை விடமாட்டார்கள். (how to use available time to optium use ). 

ஒருவேளை இவர்களை மீறி தாமதம் ஆனாலும் (under unforseen circumstances goes beyond) அந்த நேரத்திலும் எவ்வாறு இலக்கை அடையமுடியும் என்று சிந்தனையில் ஈடுபடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான வளர்ச்சி மனப்பான்மையை (Growth Mindset) வளர்த்துக் கொள்வது எப்படி?
If you can, you can..!

இவர்களுக்கு  மிக நன்றாகவே தெரியும்  முன்னேறி செல்ல எதிர் கொள்ளும்  பாதை கரடு முரடானது, வியப்பில் ஆற்றும் சூழ்நிலைகளை சந்தித்தும் கடந்தும் செல்ல வேண்டியிருக்கும் என்று.  அதற்கு ஏற்ப   தயார் செய்து கொண்டுதான் களம் காண்பார்கள்.

எதிர்பார்க்கும்படி மிகவும் சுலபமான சூழ்நிலை எப்பொழுதும்  வரவேற்காது என்பதும்,  இவர்களுக்கு  நன்றாகவே தெரியும்.

எடுத்துக் கொள்ளும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்ற மனதிடத்துடன் இறங்குவதாலும், முடியும் என்ற சொல் உத்வேகமாக செயல்பட  தூண்டுவதாலும் பெரும்பாலான சாதனையாளர்கள் சாதித்துவிட்டு அடுத்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com