
வாழ்க்கையை அனுபவிக்கிறபோது நமது பெற்றோர் களும், வயதிலும், தகுதியிலும் நமக்குச் சமமானவர்களும், ஆசிரியர்களும் மற்றும் கணக்கற்றோரும் நம்மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள். நாம் அதற்கு உட்பட்டவர்களாயிருக்கிறோம். உன்னால் அதைச் செய்யமுடியாது' என்று சொல்கிறவர்கள் உள்ளுக்குள் பொறாமை அல்லது போட்டி மனப்பான்மை கொண்டவர்களாயிருக்கலாம், அதில் உங்களுக்குப் பிடிபடாத காரணமும் இருக்கலாம்.
அதன் விளைவாய் நம்மைப்பற்றி நாமே எதிர்மறையாய் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறோம். இந்தநிலை இருபத்தி ஐந்து, முப்பது, நாற்பது அல்லது ஐம்பது என்று எந்த வயதிலும் தொடரும்.
ராபர்ட் ரோசெந்தல் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்) என்பவர் இருபது ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டது - "அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் 'நடக்கும்' என்று அறிவு சார்ந்த நிலையில் நம்புவதன் மூலம் (Expectation) சில குறிப்பிட்ட நிகழ்வுகளைத் தங்கள் சோதனைகளின் விளைவாய் அவர்கள் கொண்டுவர முடியும்" இந்தக் கருத்தைச் சோதித்தறிய பன்னிரண்டு சோதனையாளர்களிடம் ஆளுக்கு ஐந்து எலிகளைக் கொடுத்தார். "காட்சி சார்ந்த குறிப்புகளின் உதவியோடு (Visual Clues) ஒரு சிக்கலான பாதையில் செல்வதற்கு அந்த எலிகளுக்குக் கற்றுதர வேண்டும்" என்றார்.க்ளெமண்ட் ஸ்டோன்.
அந்த எலிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியானவை என்றாலும் அவற்றில் சில எலிகள் சிக்கலான பாதை குறித்த அறிவுடையவை என்றும், சில எலிகள் அத்தனை அறிவாற்றல் இல்லாதவை என்றும் சோதனையாளர் களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சோதனைகளின் முடிவில் மற்ற எலிகளைவிட அறிவுக்கூர்மை உடைய எலிகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தது தெரிய வந்தது.
மனிதர்களும் அதே மாதிரி எதிர்ச் செயல்புரிவார்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள ரோசெந்தல் இன்னொரு ஆய்வை மேற்கொண்டார். அதற்காக அவர் எடுத்துக்கொண்டது தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஐ.க்யூ பற்றிய சோதனை. பையன்களிடம் மலரும் அறிவுத்திறனை அடையாளம் கண்டு கொள்ளும் விதமாய் அந்தச் சோதனை வடிவமைக்கப்பட்டிருப்பதாய் ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்தார்.
அந்தப் பள்ளிக்கூடம் பதினெட்டு வகுப்பறைகளைக் கொண்டது. அவற்றிலுள்ள மாணவர்கள் சராசரிக்கும் குறைவான திறமை உடையவர்கள், சராசரியான திறமை உடையவர்கள், சராசரிக்கும் கூடுதலான திறமை உடையவர்கள் என்று தரவாரியாய் பிரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்திலிருந்தும் இருபது சதவீதம் குழந்தைகளை அறிவுமலர்ச்சி கொண்டவர்களாய் ரோசெந்தல் தெரிவு செய்தார்.
பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு எல்லா மாணவர்களுக்கும் அவர் இன்னொரு ஐ.க்யூ' சோதனை வைத்தார்.
முதலாம் வகுப்பு படித்த மாணவர்களில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட மாணவர்கனை விட மற்றவர்கள் பதினைந்து ஐக்யூ புள்ளிகள் கூடுதலாய் பெற்றிருந்தனர். இரண்டாம் வகுப்பில், பத்து ஐக்யூ புள்ளிகள் கூடுதலாய் இருந்தது. அறிவுமலர்ச்சி உள்ளவர்களாய் ஆசிரியர்கள் எதிர்பார்த்த நாற்பத்தகயேழு சதவீத மாணவர்களின் ஐக்யூ இருபது புள்ளிகள் கூடுதலாய் இருந்தது.
ஒரே வேறுபாடு குழந்தைகள் பற்றி ஆசிரியர்கள் கொண்ட எதிர்பார்ப்புகளில் இருந்ததுதான்.ஆக்கபூர்வமாகவோ, எதிர்மறையாகவோ மற்றவர்கள் நம்மீது செலுத்தும் செல்வாக்கிற்கு (influence) ஏற்ப நாம் எதிர்ச்செயல் புரிகிறோம். அதை செல்வாக்கு, பாதிப்பு, ஆளுகை என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னாலும் பொருள் என்னவோ ஒன்றுதான். சிறு வயது முதலே அத்தகைய செல்வாக்குகளில் பாதிக்கப்படுகிறவராகவே நாம் இருக்கிறோம்.
நாம் எதிர்மறையாய் சிந்திக்கத் தொடங்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்மறை எண்ணங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஆக்கபூர்வமான எண்ணங்களை வைக்கவேண்டும் என்கிறார்ஸ்டோன். நாம் அதை ஒரு பழக்கமாகவே கொள்வது நல்லது. நம்முடைய மனதை நாம் கட்டுப்பாட்டில் - சரியான நிலையில் வைக்கவேண்டும் அவ்விதமாய் நமது உடலுறுப்பு களையும் நாம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.