
'படைப்பாற்றல் எனும் சொல்லிற்குப் பலர் பலவிதமாக அர்த்தம் கொள்கிறார்கள். அதைப் பற்றிப் பலவாறாக ஒரு தவறான கருத்து பரவுகிறது. அதன் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்வோம். தர்க்க ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத காரணத்தில், விஞ்ஞானம், பொறியியல், மற்றும் கலை மற்றும் எழுத்தாற்றல், போன்றவையே உண்மையாகப் படைப்பாற்றல் கொண்டவை என்ற தவறான கருத்து நிலவுகிறது.
பெரும்பாலோர் போலியோ ஊசி மருந்து கண்டுபிடிப்பு, அல்லது மின்சாரத்தைக் கண்டு பிடித்தது அல்லது ஒரு நாவலை எழுதுவது அல்லது கலர் டி வி.யைக் கண்டு பிடித்தது போன்றவற்றையே படைப்பாற்றல்களாக எடுத்துக்கொள்கிறார்கள்.
நிச்சயமாக, இந்த சாதனைகள் எல்லாம் படைப் பாற்றலுக்கு உதாரணங்கள்தான். விண்வெளியை ஒவ்வொரு மைல் கல்லாக வென்று முன்னேறியது படைப்பாற்றல் சிந்தனையின் விளைவுதான். அறிவில் மிக உயர்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் அல்லது, ஒரு சில துறைகளை மட்டுமே அது சார்ந்தது என்று சொல்ல முடியாது.
மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பம் தங்கள் மகன்களில் ஒருவரை பிரபல பல்கலைக் கழகத்திற்கு படிப்பிற்காகஅனுப்புவதற்கு திட்டமிடுகிறது இது படைப்பாற்றலுடன் கூடிய திட்டமே.
ஒரு குடும்பம் வேலை செய்து, மிக அசுத்தமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்த தங்கள் தெருவை அந்த சமூகமே கண்டு வியக்கும் வகையில் பெருக்கி, சுத்தமாக்கி, ஒரு அழகு மிக்க இடமாக மாற்று கிறது. அதைப் படைப்பாற்றல் மிக்க சாதனை என்று சொல்லலாம்.
தேவையற்ற ஆவணங்களைத் தயாரித்து குவிப்பது, நம்பிக்கையே எழாத வாடிக்கையாளருக்கு எப்படியாவது சரக்குகளை விற்க முடிவது. குழந்தைகளை எப்பொழுதும் ஆக்கபூர்வமான செயல்களிலேயே ஈடுபட்டு இருக்கச் செய்வது, தன் கீழ் பணி புரியும் ஊழியர்களைப் பணியின் மீது முழுமையான ஈடுபாட்டோடு இருக்கச் செய்வது. குறிப்பிட்ட சூழல்களில் வழக்கமாக எழும் சண்டை சச்சரவுகளை சமயோசிதமாக தவிர்க்க வைப்பது இவை யெல்லாம் நாம், அன்றாடம் காணும் காட்சிகள் அவை அனைத்தும் படைப்பாற்றலினால் விளைபவையே ஆகும்.
நம்பிக்கை படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. அவநம்பிக்கை அதைத் தடுக்கிறது. நம்பினால் ஆக்கபூர்வ சிந்தனை தானாக வெளிவர ஆரம்பிக்கும். உங்கள் மனதை முறையாக செயல்படவிட்டால் அது தானாகவே ஒரு வழியை கொண்டு வரும்.
ஆகவே முடியும் என நம்பி முழுமனதோடு பரந்து விரிந்த சிந்தனையில் படைப்பாற்றலை உபயோகித்து சொந்த வாழ்க்கையில் முன்னேறுங்கள்.