

எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற இலக்கை நோக்கி அனைவரது பயணமும் தினசரி தொடங்குகிறது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல இலக்கில்லா பயணமும் தோல்வியிலேதான் முடிகிறது.
நல்ல தூய்மையான தீபத்திற்கான எண்ணையை ஊற்றி, திாியைப்போட்டு பத்த வைப்பதால் மட்டும் சுடர் ஒளி வராது, நன்கு தூண்டிவிட்டால் மட்டுமே பிரகாசமாய் எாியும். அதேபோலத்தான் நமது விவேகம், விடாமுயற்சியால், தூண்டிவிட்டால்தான் வாழ்க்கை எனும்,விளக்கு பிரகாசிக்கும். வெளிச்சம் எனும் வெற்றி கிடைக்கும்.
வெற்றி அடையவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் வாழ்க்கையின் படிக்கட்டுகளை லாவகமாக தாண்டமுடியும். அதில் நாம் பல படிக்கட்டுகளை மெல்ல மெல்ல கடக்க, நிதானத்தைக் கடைபிடித்தால் மட்டுமே முடியும்.
முதல் படி தாண்டும்போது சறுக்கல் ஏற்பட்டதால் தோல்வி, சரி அதேவேகத்தில் இரண்டாம், மற்றும் மூன்றாம்படிகள் ஏறும்போதும் அதே நிலை, மனது காயப்படுகிறதே!
சோா்வு, பயம், தளா்ச்சி நம்மால் முடியாது என்ற தாக்கம் வருவது இயல்பே. இந்நிலையில்தான் நமக்கு தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி எனும் பக்கவாட்டு சுவர் உற்சாகம் தருகிறது.
அதனால் நான்காம் படி, மற்றும் ஐந்தாம்படியை கடக்க முயலும் போது நிதானம் எனும் ஆறாவது படியில் கால் வைக்கும் நேரம் நெருங்கிவரும். அதனைத்தொடர்ந்து தலைக்கனம் எனும் அரக்கன் நம்மை பின்னுக்கு தள்ள எத்தனிக்கும் நிலையில்நாம் நமது லட்சியம், இலக்கு, எனும் நோ்மறை எண்ணங்களை கடைபிடித்து ஏழு தொடங்கி பத்தாவது படிவரை சுலபமாக தாண்டிவிடலாம்.
பத்தாம் படியை தாண்டும்போது முன்னேற்றம், வைராக்கியம், அடுத்தவர்கள் தொடுத்த எதிா்மறை விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு, கொண்ட லட்சியம் தவறாமல் நம்மால் முடியும், நான் சாதிக்கப் பிறந்தவன் என்ற உத்வேகத்தை கடைபிடியுங்கள் தொடர்ந்து படி ஏறுங்கள். நீங்கள் கடந்து வந்த, ஏறிவந்த படிகளில் கிடைத்த அனுபவமானது தைாியத்தையும் உற்சாகத்தையும் வளா்த்து விடுமல்லவா!
அப்புறம் என்ன வெற்றி தேவதை மாலையுடன் முதல் தளத்தில் காத்திருப்பது கண்களுக்கு தொியுமே! வெற்றி மாலையுடன் விமர்சனங்கள் தவிா்த்து தோல்வியைப் புறந்தள்ளி ஜெயித்துக் காட்டுங்களேன், தடைகள் கூட தானாக விலகிவிடுமல்லவா!